full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஸ்ட்ரைக்கினால் கருணாகரனுக்கு வந்த பழக்கம்!!

ஒரு மாத கால ஸ்ட்ரைக்கினால் பல தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்திருப்பார்கள் என்பது உண்மையானாலும் கூட, சில நடிகர்கள் “ஹப்பாடா, இப்பவாச்சும் லீவு கிடைச்சதே” என்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டிருப்பார்கள் நிச்சயமாய்.

அப்படித்தான் நகைச்சுவை நடிகர் கருணாகரனும், இந்த ஸ்ட்ரைக்கினால் கிடைத்த காலத்தை தன் குடும்பத்தோடு நிம்மதியாக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறார்.

இதோ ஸ்ட்ரைக்கில் அவர் எண்ண செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரே சொல்கிறார்,

“ரொம்ப ரிலாக்ஸா வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன். சினிமா ஸ்டிரைக் நடந்துக்கிட்டிருக்கு. அதனாலே ரொம்ப போர் அடிக்குது. சரி வீட்டிலே நம்ம பசங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணுவோம்னு அவங்ககூட ஜாலியா ஊர் சுத்திக்கிட்டிருக்கேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. அவங்க ஸ்கூல் படிக்குறாங்க. அவங்களுக்கும் சம்மர் ஹாலிடே விட்டாச்சு. ஸோ, அவங்ககூட வீட்டிலேயும், வெளியேயும்னு நேரம் செலவிடுகிறேன். வெளியூர், வெளிநாடு எங்கேயாச்சும் போகலாம்னு பார்த்த ஸ்டிரைக் எப்போ முடியும்னு தெரியல. திடீரென்னு எப்போ வேணாலும் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம். எப்போ ஷூட்டிங் போவோம்னுதான் இருக்கு. ஆனா, இப்போ வீட்டிலே சும்மாயிருக்குறதே பழகிரும் போல”, என்று கலகல்ப்பூட்டுகிறார்.