கருப்பு ராஜா வெள்ளை ராஜாவும் தனித்தனியா வர்றாங்களா?

News

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்க ஒப்பந்தமான படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

படப்பிடிப்புக்கு முன்பே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியது. படத்தின் பாடலுக்காக பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிநாடு சென்றிருந்தனர். மேலும் 4 பாடல்களும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு காரணங்கள் ஏதுமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக புதிய தகவல் ஒன்று வந்துள்ளது. எனினும் இதுகுறித்த முழு தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.

விஷால், கார்த்தியின் தேதிகள் கிடைப்பதிலும் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு மாதம் முதல் விஷால் `சண்டக்கோழி 2′-ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். எனவே இந்த படம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என்ற கேள்வியும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசுடன், பிரபுதேவா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரு நடிகர்களையும் வைத்து தனித்தனி படங்கள் இயக்க பிரபுதேவா முடிவு செய்திருப்பதாக, கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சும் அடிபடுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.