“காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !

Entertainement Movie
0
(0)

ஒரு திரைப்படத்தினை விரைவாக முடிப்பதில் வல்லவராக விளங்கும் இயக்குநர் கண்ணன் மீண்டும் தன் திறமையை நிரூபித்து இப்படத்தில் காட்டியிருக்கிறார். அவரது இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு முழுதாக நிறைவு பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே திட்டமிட்டது போல், பெரும் நடிகர் பட்டாளத்தை வைத்து, ஒரே கட்ட படப்பிடிப்பில் முழுப்படப்பிடிப்பையும் முடித்து சாதித்துள்ளது படக்குழு.

தயாரிப்பாளர், இயக்குநர் கண்ணன் இது குறித்து கூறியதாவது…
எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன் ஆனால் “காசேதான் கடவுளடா” முற்றிலும் வேறானது. அனைவரும் முடங்க்கியிருந்த பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். இவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் உட்பட்ட நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் மட்டுமே தான் காரணம், அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் தான் இது சாத்தியமானது. விரைவில் படத்தின் விஷுவல் புரமோவுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் திரை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரைவில் வெளியிடவுள்ளோம் என்றார்.

இப்படத்தில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி மற்றும் புகழ், சுப்பு பஞ்சு, தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். N. கண்ணன் இசையமைக்கிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் கண்ணன் உடைய Masala Pix நிறுவனம், MKRP Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.