full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஜீரோவாக இருந்து நூறு ஆன கத்ரீனா

இங்கிலாந்தில் இருந்து வந்து இந்தி படங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் கத்ரீனா கைப். 2003-ல் இவர் படங்களில் நடிக்க வந்த போது நடனம் ஆடத்தெரியாது. இப்போது படங்களில் சூப்பராக நடனம் ஆடும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

தற்போது சிறப்பாக நடனம் ஆடக் காரணம் என்ன? என்பது குறித்து கத்ரீனா கைப் கூறுகிறார்.

“நடிக்க வந்த புதிதில் நடனம் ஆடுவது எனக்கு மிகப்பெரிய கஷ்டமாக இருந்தது. தெலுங்கில் வெங்கடேஷ் படம் ஒன்றில் அவருடன் சேர்ந்து நடித்தேன். அதில் டான்ஸ் மாஸ்டராக ராஜுசுந்தரம் பணியாற்றினார். நான் நடனம் ஆடியது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் என்மீது கோபமாக இருந்தார். ஆனால் அதுபற்றி எதுவும் என்னிடம் சொல்லவில்லை.

அதன்பிறகு சல்மான்கானுடன் சேர்ந்து ‘வான்டட்’ படத்தில் நடித்தேன். அப்போது டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம், படத்தின் நாயகன் சல்மான்கானிடம், “டான்சராக கத்ரீனா கைப் ஜீரோ” என்று சொன்னதை நான் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன்பிறகு நடனத்தில் முத்திரை பதிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனவே, டான்ஸ் மாஸ்டர்கள் போஸ்கோ- கீசர் ஆகியோரிடம் நடனம் பயின்றேன். அவர்கள் நம்பிக்கை அளித்தனர். வேறு சில மாஸ்டர்களிடமும் கடுமையான பயிற்சி பெற்று நடனம் ஆடுவதற்கு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.” என்றார்.