“காவல்துறை உங்கள் நண்பன்” திரைக்குழு “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புதுவகை ஜானரில் முதல்முறையாக “பி.ஈ. பார்” (B.E. BAR) திரைப்படத்தை உருவாக்குகிறது !

cinema news
0
(0)

காவல் துறை உங்கள் நண்பன் திரைப்படம் அதன் தீவிரமான கருத்து, ஈர்க்கும் கதை அமைப்பு மற்றும் நடிகர்களின் அற்புத நடிப்பிற்காக அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. இந்த திறமைமிகுந்த திரைக்குழுவினர், “பி.ஈ. பார்” (B.E. BAR) என்ற தலைப்பில் தங்கள் இரண்டாவது திரைப்பட பயணத்தை தற்போது துவக்கியுள்ளனர் இந்த் குழுவின் முந்தைய திரைப்படம் நமது மனதை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்தை கொண்டிருந்தது, ஆனால் இந்த இரண்டாவது படைப்பு , முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புது ஜானரில் உருவாகவுள்ளது. இக்கதையின் மையம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.

மோ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக சதுரங்க வேட்டை புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.காவல்துறை உங்கள் நண்பன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் RDM இப்படத்தை இயக்குகிறார். தொழில்நுட்பக் குழுவில் விஷ்ணு ஸ்ரீ K.S., ஆதித்யா & சூர்யா (இசை), வடிவேல் & விமல்ராஜ் (எடிட்டிங்), சிவராஜ் (கலை), கல்லூரி வினோத் (வசனம்), ஞானகரவேல் & கானா பிரபா (பாடல் வரிகள்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

“பி.ஈ. பார்” (B.E. BAR) படத்தினை Absolute Pictures நிறுவனம் சார்பில் மால்கம், BR Talkies Corporation மற்றும் White Moon Talkies உடன் இணைந்து தயாரிக்கிறார். B. பாஸ்கரன், P. ராஜபாண்டியன், மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.