புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்

Actresses
0
(0)

*புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்*

*தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம்*

தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில் பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய அதிர்ச்சியில், உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர், திரைப்படங்களில் உதவி இயக்குநரானார். சினிமாவில் நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் நாயகனாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் அவர் நாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” திரைப்படங்கள் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. நடிகர் கவினுக்கென தனி ரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார் கவின். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.