full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கிரகணத்து சந்திரனின் லிப் டூ லிப்!

பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர் சந்திரன். தற்போது . ‘ரூபாய்’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படங்களில் நடிக்கிறார். ‘கிரகணம்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இதில் கயல் சந்திரன் ‘பாசிட்டிவ்’ வேடத்திலும், கிருஷ்ணா ‘நெகட்டிவ்’ வேடத்திலும் நடித்திருக்கிறார்கள். சந்திரன் ஜோடியாக நந்தினி ராய் நடித்துள்ளார். இவர்களுக்கு காதல் காட்சி இருக்கிறது. முத்தக்காட்சி கிடையாது.

ஆனால் இதில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள சிங்கப்பூர் தீபனுக்கும், கயல்சந்திரனுக்கும் இடையே உதட்டோடு உதடு இணையும் முத்தக்காட்சி உள்ளது.

இது பற்றி கூறிய கயல் சந்திரன்….

பெரும்பாலும் நாயகன், நாயகி இடையே தான் முத்தக் காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சிங்கப்பூர் திலீபனுடன் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறேன். அதுவும், உதட்டு முத்தக்காட்சி. இது நான் சினிமாவுக்கு வந்த பிறகு நடந்த முதல் முத்த காட்சி. எனவே எனக்கு இது மறக்க முடியாத முத்தக்காட்சியாக அமைந்து விட்டது” என்றார்.