வெளிவருகிறது கயல் ஜோடியின் ரூபாய்

News

காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க, ஆர்.பி.கே எண்டர்டெயின்மன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ரூபாய்”
சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமானவர்கள். மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – D.இமான், பாடல்கள் – யுகபாரதி, எடிட்டிங் – R.நிர்மல், கலை – ஏ.பழனிவேல், நடனம் – நோபல், ஸ்டன்ட் – மிராக்கிள் மைக்கேல், நிர்வாகத் தயாரிப்பு – ஜே.பிரபாகர், இணை தயாரிப்பு – ஆர்.ரவிச்சந்திரன், தயாரிப்பு – பிரபுசாலமன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.அன்பழகன்.

படம் பற்றிப் பேசிய போது, “பணம் எல்லோருக்கும் அவசியம் தான். அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம். நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். இதைத் தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போது 500, 1000 ரூபாய் பிரச்சனையால் இந்த ரூபாய் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பல இடையூறுகளை கடந்து இம்மாதம் 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. புதிதாக வந்த ரூபாய் நோட்டை மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போல் இந்த ரூபாயையும் ஏற்றுக்கொள்வார்கள்.” என்றார்.