நிவின் பாலியுடன் கைகோர்க்கும் மக்கள் செல்வன்!

News

19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்தவர் கொச்சுண்ணி. இவர் ராபின்ஹுட் போல
செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். 1859-ல் கொச்சுண்ணி
போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவரது வாழ்க்கையை
மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கப்படுகிறது.

கோகுலம் கோபாலன் வழங்கும் “ஸ்ரீகோகுலம் மூவிஸ்” தயாரிக்கும் திரைப்படம் “காயம்குளம் கொச்சுண்ணி”.

இதை “36 வயதினிலே”, “மும்பை போலீஸ்” புகழ் ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார். இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி
நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி, சஞ்சய்
ஆகியோர் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

மேலும் இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.