full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்!

தமிழில் தற்போதைக்கு பரபரப்பாக நடித்து வரும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர், பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக தயாராகும் படத்திலும் நடிக்கிறார்.

தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில்,

‘“ சாவித்ரி மேடம் பாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய சவாலான வி‌ஷயம். இந்த வேடத்துக்கு என்னை தேர்வு செய்த போது, என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது.

சிவாஜி சாருக்கு சமமாக நடித்து பெயர் வாங்கிய சாவித்ரி போல நடிப்பது சுலபமான வி‌ஷயம் அல்ல. அவரது மகள் விஜயசாமுண்டீஸ்வரி உள்பட அனைவரும் அளித்த ஆதரவு, ஊக்கம் தான் இதில் நடிக்கும் தைரியத்தை எனக்கு தந்தது. அவர் நடித்து சாதனை படைத்த படங்களை நேரம் கிடைக்கும் போது போட்டு பார்த்து வருகிறேன். சாவித்ரி வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது.

எனது நடிப்பை அனைவரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் என்னை தயார்படுத்தி வருகிறேன். எனது எடை அதிகரித்து விட்டதாக கூறினார்கள். இப்போது கடுமையாக உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து இருக்கிறேன்.

நான் ஒரு போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். விஷாலின் ‘சண்டைக்கோழி-2’ படத்தில் நடிக்கிறேன். வர லெட்சுமியும் நடிக்கிறார். விக்ரமின் ‘சாமி-2’ படத்தில் நானும், திரிஷாவும் நடிக்கிறோம். சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும் நடிக்கிறேன்.

இப்போது நான் நடித்து வரும் படங்கள் அனைத் தும் எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும்”.