full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

முடியவே.. முடியாது சாமி.. அலறிய கீர்த்தி சுரேஷ்!

 

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 1970-களில் புகழின் உச்சத்தில் இருந்தவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி. இவருடைய வாழ்க்கை வரலாறு
‘மகாநதி’ என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சாவித்ரி சற்று குண்டான தோற்றம் கொண்டவர். எனவே கீர்த்தி சுரேசையும் உடல் எடையை கூட்டி, குண்டான தோற்றத்துக்கு மாறும்படி டைரக்டர் நாக்.அஸ்வின் கேட்டிருக்கிறார்.
அதற்கு கீர்த்தி சுரேஷ் “அய்யயோ சாமிகளா, நம்மால் இதெல்லாம் செய்ய முடியாதுப்பா” என்று மறுத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் குண்டு தோற்றத்துக்கு மாற மறுத்ததற்கு காரணம், நம்ம “ஸ்வீட்டி”அனுஷ்கா தானாம்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில், மொழுமொழு குண்டு பெண்ணாக நடித்திருந்தார்.
அந்தப் படத்திற்காக உண்மையிலேயே உடல் எடையை அதிகரித்துவிட்டு, அதை குறைப்பதற்கு அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

எப்படியாவது பழைய தோற்றத்திற்கு மாறியே தீரவேண்டும், என எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவேயில்லை. பிரச்சனை,
“பாகுபலி” படத்தில் அனுஷ்காவையே கிராஃபிக்ஸ் செய்து ஒல்லியாக காண்பிக்கும் அளவிற்கு போனது.

இதை மனதில் வைத்தே கீர்த்தி சுரேஷ், உடல் எடையை கூட்ட மறுத்ததாக கூறப்படுகிறது.
எனவே ‘கிராபிக்ஸ்’ மூலம் கீர்த்தி சுரேசை பருமனாக காட்ட டைரக்டர் நாக்.அஸ்வின் முடிவு செய்து இருக்கிறாராம்.