full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘காண்டு கண்ணம்மா’ சிங்கிள் ட்ராக்

 

 

சோனி மியூசிக் பிரம்மாண்டமாக ஒரு சிங்கிள் ட்ராக் ஒன்றை வெளியிடுகிறது. தமிழ்சினிமாவின் இளம் இசை அமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசை அமைத்து பாடியுள்ள ‘காண்டு கண்ணம்மா’ எனும் பாடல் வெளிவருவதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள் கலகலப்பாக பேசினார்கள்,

விவேக் மெர்வின்: பேசியதாவது ,

“ஸ்கூல் டேஸில் இருந்தே நாங்கள் ஒன்றாக இசையில் பயணித்து வருகிறோம்.  ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கான்செப்ட். பட்டாஸ் ஒரு ஜானர். டோரா ஒரு ஜானர், குலேபகாவலி ஒரு ஜானர். பட்டாஸ் படத்தின்  பின்னணி இசையை  பத்து நாட்களில் செய்தோம்.  ரெண்டுபேருமே  லைவ் இண்ட்ஸ்ருமெண்ட்ஸ் யூஸ் பண்ண வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். பட்டாஸ் படத்தில் 25 பேரை வயலின்க்கு மட்டுமே யூஸ் பண்ணோம்.

 

விஸ்வநாதன் ராமமூர்த்தி என இரட்டை ஜாம்பவான்களோடு  எங்களை ஒப்பிடும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு..அதே டைம் ரொம்ப பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற பயமும் இருக்கிறது.

ஒரசாத பாட்டு பண்ணும் போது தான் இப்படி ஒரு  மார்க்கெட் இருப்பதை உணர்ந்தோம். இதற்கு முந்தைய எங்களின் சிங்கிள் ட்ராக் பாடலான ஒரசாத பாடல் இணையத்தில் 150 மில்லியன் வீவ்ஸைத் தாண்டி இருப்பதை சாதனையாகப் பார்க்கிறோம்.  தமிழ்சினிமாவிலே
மொத்தம் 10-க்கும் குறைவான பாடல்கள் தான் இவ்வளவு வீவ்ஸை எட்டியுள்ளது. அந்த வரிசையில் ஒரு தனி ஆல்பம் பாடலும் பெற்றுள்ளது என்பது பெரிய விசயம். மக்கள் தரமாக இருந்தால் அது எந்த மீடியமில் வந்தாலும் கொண்டாடுவார்கள்

 

இப்போது பாட்டு இல்லாமல் படம் வருகிறதே?

பட்டாஸில் ஆறு பாட்டு இருந்தது. டோராவில் இரண்டு பாடல்கள் தான். அதே டைம் பாடல்கள் இல்லாவிட்டாலும் அதற்கு எங்களால் முடிந்த பெஸ்ட் பேக்ரவுண்ட் இசையை  கொடுப்போம்..நாங்கள் யாரோடும் போட்டி போடவில்லை. எங்கள் ஜெனரேசனில் எல்லா இசை அமைப்பாளருமே பிரண்ட்ஸாக இருக்கிறோம்.

இந்த காண்டு கண்ணம்மா  ட்ராக்கும் ஒரசாதே மாதிரி ஒரு சிங்கிள் ட்ராக்.

கு.கார்த்திக் தான் இந்தப்பாட்டை எழுதி இருக்கிறார். நாங்கள் சினிமா படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டே ரெகுலராக  இண்டிபெண்ட் சாங்ஸும் பண்ணலாம் என்று  முடிவெடுத்துள்ளோம்.

காண்டு கண்ணம்மா பாடலை நாங்கள் இருவரும் இணைந்து பாடியுள்ளோம்..காண்டு கண்ணம்மா ஜாலியான பாடலாக இருக்கும். இப்பாடல் பாங்காங்கில் படமாக்கப்பட்ட பாடல்.

சினிமாவில் நடிக்க  ஆர்வம் இல்லை. எங்களுக்கு ஆர்வம் இசையில் தான். பாடலில் நாங்கள் பெர்பாமன்ஸ் பண்ணுவதை எல்லாம் நடிப்பு என்று சொல்லக்கூடாது.

நிறைய பாடகர்களைப் பிடிக்கும். பாடல் கம்போஸிங்கின் போதுஎங்களுக்குள் நிறைய சண்டை வரும். ஆனால் அது பாட்டு நல்லா வரணும் என்பதற்காகத் தான். அதை  சண்டை என எடுத்துக்கொள்ள முடியாது. ஆக்கப்பூர்வமான  திறன் ஆய்வாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

 

நிறைய கமர்சியல் படங்கள் பார்ப்போம்..நல்ல எண்டெர்டெயின்மெண்ட் படங்கள் பிடிக்கும்..எல்லா பிராசஸையும் நாங்க ரெண்டுபேருமே பண்ணுவோம். சீக்கிரம் ஒரு பாடலை பண்ணிவிட்டோம்னா அந்தப்பாட்டு சீக்கிரம் ரீச் ஆகிடும். ஒரு பாட்டுக்கு ஒரு மெயின் ஐடியா வரும். அப்படி வந்த பிறகு தான் இயக்குநரிடம் எடுத்துச் செல்வோம்.

வெளிநாட்டிற்குச் சென்றால்  தான் கம்போஸ் பண்ண முடியும் என்பதெல்லாம் கிடையாது..நாங்கள் போட்ட நிறைய ஹிட் சாங்ஸ் எல்லாம் நம்ம ஊர் மொட்டை மாடியில் இருந்து போட்டது தான்” என்றனர்.

பாடலாசிரியர் கு.கார்த்திக்:

இந்தப் பாடலின் கான்செப்ட் பொண்ணு கோபமாக இருக்காங்க..அவங்க சொல்றதை எல்லாம் பையன் பாசிட்டிவாக எடுத்துக்கிறான் இதான் பாட்டு.” என்றார்.

பாடல் பற்றிய அறிமுக விழாவில் பாடல் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் விவேக் மெர்வின் நன்றி தெரிவித்தனர்