சாகுந்தலம் தோல்வியில் சமந்தா லைகர் தோல்வியில் விஜய் தேவரகொண்டா இயக்குனர் சிவா நிர்வாண டக் ஜெகதீஷ் தோல்விக்கு பிறகு இவர் இந்த தோல்வி கூட்டணி வெற்றிக்காக போராடும் இந்த மூவர் இணைந்து வெளிவந்து இருக்கும் படம் தான் குஷி.
காதலர்கள் வீட்டு பிரச்சனையில் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்கிறார்கள் அதன் பின் எழும் பிரச்சனைகளை அலைபாயுதே ஸ்டைலில் சொல்லி இருக்கும் படம் தான் இந்த குஷி.
மிக பெரிய பணக்காரனின் மகன் தான் விஜய் தேவரகொண்டா இவர் பி எஸ் என் எல் நிறுவனத்தில் சேருகிறார். இவருக்கு காஷ்மீரில் வேலைக்கு செல்கிறார். அங்கு சமந்தாவை சந்திக்கிறார்.சமந்தா ஒரு இஸ்லாமிய பெண் என்று நினைத்து விழுந்து விழுந்து காதலிக்கிறார். அவரின் தொல்லையில் இருந்து தப்பிக்க சமந்தா சிலை பொய்களை சொல்கிறார்.அவரிடம் இருந்து தப்பிக்க இருந்தும் விஜய் அவரை விடாமல் துரத்த காதலுக்கு ஓகே சொல்கிறார்.எதிர்ப்பார்த்தபடி இரு வீட்டிலும் எதிர்க்க இருவரும் பதிவு திருமணம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் வாழ்க்கையில் சிக்கல்கள் அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் இணைந்தார்களா இல்லை எனது தான் மீதி கதை
இந்த படத்தி திரைக்கதையை நாம் பல படங்களில் பார்த்த திரைக்கதை தான் புதுசு இல்லை.படத்தின் திரைக்கதையில் ஆழம் இல்லை அழுத்தமும் இல்லாத ஒரு திரைக்கதை.முக்கியமான எமோஷன் காட்சிகள் இல்லாத குஷி என்று தான் சொல்லணும்.ஆரம்பத்தில் நாயகன் அறிமுகம் தந்தை அறிமுகம் நல்ல இருந்தாலும் மற்றவையில் எதிலும் சுவாரியாசம் இல்லை என்று தான் சொல்லணும்.
சமந்தா காட்சிகள் எதுவும் கதையுடன் ஒட்டாமல் செல்கிறது.விஜய் தேவரகொண்டா காதல் காட்சிகள் எல்லாம் அலுப்பை தட்டுகிறது.இயக்குனர் சிவாவுக்கு காதல் காட்சிகள் என்றால் என்ன என்று கேள்வி கேட்ப்பார்போல தெரிகிறது பல காதல் படங்களை பார்த்து காதல் கதை எழுதியவர் காதல் காட்சிகளையும் பார்த்து எழுதி இருக்கலாம்.படத்தின் பட்ஜெட் இருக்கு என்பதற்க்காக காஷ்மீர் காட்சிகள் இது படத்துக்கு தேவையா என்பது கேள்வி குறி
படத்துக்கு சம்மதமே இல்லாத காஷ்மீர் ராணுவம் சிரிப்பே வராத வெண்ணிலா கிஷோர் காமெடி என படம் மனம் போன போக்கில் போகிறது. இதில் தேவை இல்லாமல் பீப் பிரியாணி காமெடி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
மொத்தத்தில் குஷி நமக்கு குழி