இது இணையத்தின் காலம். எல்லா செய்தியும் இங்கே அரை நொடியில் ட்ரெண்டிங்கில் ஏறி, உலகையே சுற்றி வந்து விடும். அப்படித்தான் பல தகவல்கள் காற்றில் மிதந்த வண்ணமே இருக்கின்றன.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு கிராமத்தில் நடக்கிற செய்திகளை வேகமாக பரிமாறிக் கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் முதியவர்கள் தான்.
அதிலும் குறிப்பாக “கிழவிகள்” தான் கிரமப்புறங்களில் செய்தித் தொடர்பு சாதனமாக விளங்கினார்கள்.
இன்றைய ட்விட்டர், முகநூல், இன்ஸ்டா வலைதளங்களுக்கு நிகராக அவர்களது தகவல் பரிமாற்றம் வேகமுடையது என்பதை சுவாரஸ்யமான வரிகளாக்கி ஒரு பாடல் ஒன்று தயாராகியுள்ளது.
எழுத்தாளர், பாடலாசிரியர் முருகன் மந்திரம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த பாடல் தற்போது “கிழவி ஆன்ந்தம்” என்ற பெயரில் “யூ-டியூப்” தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
“மார்த்தாண்ட சக்ரவர்த்தி” என்கிற வெப் சீரீஸ் “மெட்ராஸ் செண்ட்ரல்” யூ-டியூப் தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. காமெடி சீரீஸாக உருவாகியுள்ள இதை,
பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார். “என் ஆளோட செருப்பக் காணோம்”, “மிக மிக அவசரம்” ஆகிய படங்களுக்கு இசையமைத்த இஷான் தேவ் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அருண்கிருஷ்ணா எடிட் செய்துள்ளார்.
இந்தப் பாடலின் சிறப்பே, இதில் பணிபுரிந்திருப்பவர்கள் எல்லோரும் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் என்பது தான். பாடலாசிரியர் முருகன் மந்திரம் “விருந்தாளி”,
”சும்மாவே ஆடுவோம்”, “உ”, “யோகன்”, “திருட்டு விசிடி” என பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தற்போது “அரைப்பைமா” என்னும் படத்திற்கு எல்லாப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
மேலும், இவர்தான் சில நாட்களுக்கு முன் வைரலான “விஷால் ஆன்ந்தம்” பாடலின் வரிகளையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“கிழவி ஆந்தம்” பாடலை முக்கியமான பிரபலம் ஒருவர் பாடியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல நடிகர், இசையமைப்பாளர், பாடகர் பிரேம்ஜி அமரன் தான் இந்தப் பாடலை பாடியுள்ளார்.
துள்ளலான இந்தப் பாடலை, பிரேம்ஜியின் துடிப்பான குரல் மேலும் கொண்டாட்டமாக்கியிருப்பதாக குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வரிசையாக வந்துகொண்டே இருக்கும் ஆன்ந்தம் பாடல்களுக்கு மத்தியில் “கிழவி ஆன்ந்தம்” தனித்துவம் பெரும் என்று பாடலாசிரியர் முருகன் மந்திரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.