பொதுவா திரைப்படங்கள்ல கதை கிடைக்குதோ இல்லையோ ஏதோ ஒரு உறவு மையமாக வைத்து படம் எடுக்கணும்னு நிறைய இயக்கநர்கள் நினைப்பாங்க.
அந்த உறவு எப்படின்னு பாத்தீங்கன்னா ஒரு பிரண்ட்ஷிப் இருக்கலாம், இல்லனா ஒரு அப்பா அம்மா உறவா இருக்கலாம்,இல்ல அண்ணன் தங்கச்சி உறவா இருக்கலாம் இந்த மாதிரி உறவுகளை வைத்து படம் எடுக்குறத பார்த்திருப்போம் ஆனா எப்பயாவது ஒருவாட்டி யாரவது ஒரு இயக்குனர் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு உறவை வைத்து படம் எடுப்பாங்க .
அந்த மாதிரி உறவில் வந்திருக்கும் இந்த மாதிரி படம் தான் நாட் ரீச்சபிள்.
கதையின் ஆரம்பத்தில் 3 பெண்கள் காணாமல் போகிறார்கள், அதில் 2 பெண்கள் இறந்துவிடுகின்றனர், இவர்களை கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளாக இருக்கும் கதாநாயகன் ( விஷ்வா ) மற்றும் கதாநாயகி ( சாய் தன்யா ) இவர்கள் இருவரும் இணைந்து அந்த கேசை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன, கடைசியில் இவர்கள் அந்த இரண்டு பெண்களின் கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்தார்களா ? இல்லையா ? மற்றும் மீதம் இருக்கும் அந்த ஒரு பெண்ணை உயிரோடு மீட்டார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை
நாயகன் உட்பட பெருவாரியான புதுமுகங்களைக் கொண்ட க்ரைம் த்ரில்ல்லர் ஜானரில் வந்திருக்கும் படம் இந்த ‘நாட் ரீச்சபிள்’.
அடுத்தடுத்து ஒரே மாதிரியான தடயங்களுடன் இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். மூன்றாவதாக ஒரு பெண் காணாமல் போகிறார். அவர்களைக் கொலை செய்தது யார்? என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம்.
காவல்துறையில் இந்தக் கொலைவழக்கில் விசாரணை அதிகாரிகளாக வரும் விஷ்வா மற்றும் சுபா ஆகியோர்தாம் படம் நெடுக வருகிறார்கள். விஷ்வா நிதானமாகவும் சுபா கோபமாகவும் அணுகுவது வழக்கு விசாரணையின் தன்மைகளை உணரவைக்கிறது. அவர்கள் இருவருக்குமான உறவு சுவாரசியம்.
இவர்களுக்கடுத்து கவனிக்க வைக்கிற வேடம் சாய் தன்யாவுக்கு. மனநிலை தவறிய அவரை தொடக்கத்திலிருந்து அவ்வப்போது காட்டி வருகிறார்களே எதற்கு? என்கிற ஐயத்துக்குக் கடைசியில் சிறப்பான விடை இருக்கிறது.
ரியா என்கிற வேடத்தில் நடித்திருக்கிற ஹரிதாஸ்ரீயும் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறார்கள்.
இலக்கியா மற்றும் சாய்ரோகிணி ஆகியோரின் வேடங்கள் இளம்பெண்களுக்குப் பாடம்.
சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவில் படத்தின் கருப்பொருளை உணரமுடிகிறது. சரண்குமார் இசை ஓகே பரவாயில்லை என்கிற ரகம்.
எழுதி இயக்கியிருப்பதோடு படத்தொகுப்பும் செய்திருக்கிறார் சந்துரு முருகானந்தம். கொலை வழக்குகளை காவல்துறை அணுகும் விதம் கதாபாத்திரங்கள் ஆகியனவற்றை நிறைவாகச் செய்திருக்கிறார். முதல் படம் என்கிற எண்ணம் வரவில்லை என்பதே அவருக்கான பாராட்டு.
குற்றவாளி யார் என்கிற சஸ்பென்ஸை கடைச்வரை காப்பாற்றிய வகையில் படத்தில் நல்ல கிரைமும் இருக்கிறது த்ரில்லரும் இருக்கிறது.