‘லில்லி ராணி’ – MOVIE REVIEW

movie review

வெள்ளத் தோலும், சிரித்த முகமும் கொண்ட ஒரு நவநாகரீக விபச்சாரியின் நாடகக் கதை இந்த லில்லி ராணி.

பார்சல் சர்வீஸ்ல் வேலை செய்யும் படு நேர்மையான, டீசன்டான விபச்சாரி தான் சாயாசிங்.

ஒரு ஆம்பள தன் மனைவியிடம் எத்தனை முறை தாம்பத்திய உறவு வைத்திருந்தோம் என்பதை கூட மறந்திருப்பான்.
ஆனால் மனைவி அல்லாது மற்ற பெண்களிடம் தாம்பத்திய உறவு வைத்திருந்தால் எவ்வளவு முறை என்றாலும் மறக்க மாட்டான் 53 வயதிலும் தன்னை “சக்திமான்’ என்று நிரூபித்து தான் ஆண்மைக்கு அடையாளமாக  அப்பாவியாக தம்பி ராமையா நடித்திருக்கிறார்.

இந்த படத்துல பெரிய திருப்பம் என்று சொன்னால் அந்த அமைச்சர் மகன்தான்  வாழ்த்துக்கள் தம்பி.

கதை

விபச்சாரியாக இருக்கும் பெண்ணுக்கு ( சாய் சிங் ) ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அந்த பெண் குழந்தைக்கு வித்தியாசமான கேன்சர் நோய். அந்த நோயை தீர்க்க இரத்த சம்பந்தமான யாராவது ஒருவர் உதவி செய்தால்தான் முடியும். ஆனால் அப்படி யாரும் சாயா சிங்குக்கு இல்லை. அதனால் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அவரிடம் யாரெல்லாம் உறவு கொண்டார்களோ அவர்களை எல்லாம் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார், குழந்தையை காப்பாற்ற. ‌‌ அப்படி இரண்டு பேரை அவர் கண்டுபிடிக்கிறார்‌ அவர்களும் மனிதாபிமான அடிப்படையில் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். இதனால் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. அதற்கு தேவைப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணம் எப்படி கிடைத்தது என்பது தான் திரைக்கதை.

வித்தியாசமான கதையை தான் யோசித்து இருக்கிறார்கள். விபச்சாரியின் மனதுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை சொல்ல வந்திருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாவிட்டால் உயிர் போகக் கூடிய சூழ்நிலையில் மனிதாபிமானம் எப்படி பிறக்கிறது என்பதை காட்டி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக கிளைமாக்ஸ்சில் ஒரு அமைச்சரின் மகன் அந்த குழந்தையை காப்பாற்ற தந்தையாரிடம் பொய் சொல்லி 3 கோடி ரூபாய் பெற்று இந்த குழந்தையை காப்பாற்றியதாக காட்டுகிறார்கள். ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று இந்தப் படத்தில் ஒரு கருத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். படம் கொஞ்சம் கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது. இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு வேலை பார்த்திருந்தால் இன்னும் நன்றாக பெயர் கிடைத்திருக்கும். ‌

கடைசியில் அந்த அப்பாவிடம் சென்று விஷயத்தை கூறி மூன்று கோடி பணம் கேட்டதும் அவர் எடுத்து உடனே கொடுத்து விடுவதாகவும் அந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்து நலமாகி விடுவதாகவும் படத்தை முடிக்கிறார்கள்‌.

எவ்வளவு பெரிய தொழில் இருந்தாலும் மூணு கோடிங்கிறது சாதாரண விஷயம் இல்லை. அதுவும் உடனடியா கையில கொடுத்து அனுப்புகிற அளவுக்கு  படத்துல வந்து இயக்குனர் பெருசா யோசனை பண்ணி இருக்காரு அதுதான் நம்புகின்ற மாதிரி இல்லை.

விபச்சாரியாக நடிச்ச சாயா சிங்கர்க்கு படத்துல துளி அளவும் கவர்ச்சி என்பது இல்ல ஒருவேளை அதனால் கூட இந்த படத்தை ஒத்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

இயக்குனர் தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு

ஒரு படம் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்குறீங்க லட்சக்கணக்களின் கோடிக்கணக்கிலும் செலவு பண்ணி எடுக்குறீங்க ஆனா அந்த படம் தரமா வந்து இருக்கா காட்சி அமைப்பு எல்லாம் கரெக்டா வந்திருக்கான்னு ஒரு சில இயக்குனர்களும் ஒரு சில தயாரிப்பாளர்களும்   மிஸ் பண்ணிடறாங்க .படத்துல நிறைய பஸ்வான்   காட்சிகள் இருக்கு.

 நான்சிங் அதாவது வசன காட்சிகள் வந்து உதட்டுக்கும் வசன உச்சரிப்புக்கும் சரி வராத காட்சிகள் நிறைய இருக்கிறது முதல் முறை என்றால் ஓகே.

மொத்தத்தில் இந்த ‘லில்லி ராணி’ ரசிகர்களுக்கு ‘வில்லி ராணி’ தான்.