விஜய் ஆண்டனி நடித்த “கொலை” திரை விமர்சனம்!

cinema news movie review
0
(0)

விஜய் ஆண்டனி நடித்த “கொலை” திரை விமர்சனம்!

விடியும் முன் படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள வெளியாகியுள்ள படம் கொலை. இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ரித்திகா சிங், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம்.

பிரபல மாடல் அழகி மீனாட்சி சௌத்ரி தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ரித்திகா சிங்கிற்கு உதவி செய்ய வருகிறார் முன்னாள் போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி. வழக்கமான கொலை விசாரணைக்கு பிறகு கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தார்களா? கொலைக்கான காரணம் என்ன என்பதே இப்படத்தின் கதை.

படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்தவர் என்பதால் தனது முந்தைய படத்தை போலவே இப்படத்தையும் மிகவும் வித்தியாசமான முறையில் ரசிக்கும் படி இயக்கியுள்ளார். தமிழில் ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுக்க விரும்பிய இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு கொலை, எதற்கு செய்தார்கள், யார் செய்தார் என படிப்படியாக விரியும் திரைக்கதையில் தன்னால் முடிந்த அளவு புதுமைகளை புகுத்தியுள்ளார். விஜய் ஆண்டனி வயதான தோற்றத்தில் புதிதாக நடிக்க முயன்றுள்ளார். விசாரணை காட்சிகளில் முன்னாள் போலீஸ் என்ற தோரணை தெரிகிறது. தன்னால்தான் மகள் விபத்தில் சிக்கினால் என்ற குற்ற உணர்வுடன் வலம் வந்தாலும் கொலை வழக்கை விசாரிக்க சம்மதிக்கிறார்.

ரித்திகா சிங் நிதானமான நடிப்பை அலட்டல் இல்லாமல் கொடுத்துள்ளார். மேலதிகாரியாக ஜான் விஜய் தனது பணியை நன்றாக செய்துள்ளார். மீனாட்சி சௌத்ரி மாடல் அழகி என்பதற்கு பொருத்தமாக இருக்கிறார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர். இதுபோன்ற க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு கேமரா மற்றும் பின்னணி இசை மிக முக்கியமான ஒன்று. ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் , இயக்குனருக்கு பக்கபலமாக இருந்து இப்படத்தை டெக்கினிக்கலாக பேசப்படும் படமாக மாற்றியுள்ளார். காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை வித்தியாசமான உணர்வை கொடுத்துள்ளது. பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் கவர்கிறது. ஒரு சீனுக்கும் அடுத்த சீனுக்கும் சின்ன சின்ன வித்தியாசத்தை காட்டியுள்ளார் இயக்குனர். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கொலை குறையில்லை. ரேட்டிங் 3.5/5

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.