full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கூத்தன் படத்துவக்க விழா

நீல்கிரிஸ் எண்டர்டைமென்ட் நீல்கிரிஸ் முருகன் தயாரிக்கும் முதல் படம் “கூத்தன்”.

இந்த படத்தின் படத் துவக்கவிழா மற்றும் பூஜை இன்று காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் “QUBE” சினிமா நிறுவனர், களத்தூர் கண்ணம்மா தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் மருமகனுமான அருண் வீரப்பன் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் ராஜ்குமார். மேலும் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), ஊர்வசி, மனோபாலா, பாக்யராஜ், கவிதாலயா கிருஷ்ணன், ஜூனியர் பாலையா, ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண் மற்றும் புதுமுக நடிகர் சுரேஷ், தீனா, ஆனந்த், கெளதம், மற்றும் நடிகை ஸ்ரீஜிட்டா, கீரா, சினிதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இயக்குனர் வெங்கி.A.L. எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு மாடசாமி, இசை பாலாஜி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.அனந்த், நடனம் கல்யாண், சுரேஷ். நிர்வாகத் தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா.