இயக்குனர் ராஜு முருகன் வரிசையில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் இயக்குனர் அவதாரம் எடுத்து இருக்கும் இயக்குனர் அருள் செழியன்க்கு முதலில் பாராட்டுகள் எங்கு திரும்பினாலும் நெகடிவ்வாக தான் காணப்படுகிறது. ஆனால் இயக்குனர் அருள் எழிலன் படத்தை மிகவும் பாசிடிவாகவாக படமாக்கிய விதற்கு அவருக்கு ஒரு பெரிய சலாம் விமர்சனத்தை ஆரம்பிப்போம்
நடிகர்கள்: விதார்த், யோகிபாபு, துர்கா, ஸ்ரீ பிரியங்கா, இளவரசு
இசை: அந்தோணி தாசன்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
சரி படத்தின் கரு மற்றும் விமர்சனம் பார்ப்போம் திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தை மையப்படுத்தி கதைநகர்கிறது. படத்தில் இரு நாயகர்கள் யோகிபாபு& விதார்த். துபாயில் வேலை செய்யும் யோகிபாபு. சென்னைக்குப் போய் ஐபில் மேட்ச் பார்க்க வேண்டும் எனத்துடிக்கும் விதார்த். ஐபில் மேட்ச் பார்ப்பதற்காக ₹1000 ரூபாய் தேவை விதார்த்திற்கு. கிராமத்தில் வாழும் யோகிபாபுவின் தாயார் இறந்துவிடுகிறார். யோகிபாபு அவரின் ஊர்க்காரரான இளவரசுவிடம் தான் வரும்வரையில் தன் அம்மாவை பத்திரமாக ப்ரீசர் பாக்ஸில் வைக்கச் சொல்கிறார். ப்ரீசர் பாக்ஸை அந்தக் கிராமத்தில் கொண்டு வைத்தால் ஐபில் பார்க்கப் போகலாம் என விதார்த்திற்கு டிமாண்ட் வர, அவர் யோகிபாபுவின் கிராமத்திற்குள் செல்கிறார். அதன்பின் நடக்கும் அதகள சம்பவங்கள் தான் படத்தின் கதை விதார்த் படம் என்றாலே நம்பி காசு கொடுத்து பார்க்கலாம் அதை இந்த படம் மூலமும் நிரூபித்து இருக்கிறார் விதார்த் நடிப்பில் ஜொலிக்கிறார். அதோடு தொடர் வெற்றி நாயகன் என்ற பட்டதையும் பெறுகிறார்.
யோகி பாபு நான் மட்டும் என்ன சலைத்தவனா என்று போட்டி போட்டு இருக்கிறார் நடிப்பில் எனக்கு காமெடி போல நான் ஒரு சிறந்த நடிகன் என்று நிரூபித்து இருக்கிறார். யோகி பாபு
ஒரு படத்தோட, கதையோட பாட்டு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை இந்த படம் பார்த்து ஒரு சில இசையமைப்பாளர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
பின்னணி இசை பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. காட்சிகளை எந்த இடத்திலும் டிஸ்டர்ப் செய்யாமல் கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு நச்… கிராமத்தையும் அதன் ஓட்டத்தையும் கொடுத்து அந்த கதாபாத்திரத்தோடு நாமும் சேர்ந்து பயணித்து செல்வது போன்ற ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.
கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகிபாபு தங்களுக்கு கொடுக்கப்பட்டதை மிக அழகாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள். முதல் பாதி முழுவதும் தனது யதார்த்த நடிப்பால் விதார்த் அனைவரையும் கவர, இரண்டாம் பாதியை தனக்காக்கி இருக்கிறார் யோகிபாபு. செண்டிமெண்ட், காமெடி என அனைத்திலும் இறங்கி அடித்திருக்கிறார் யோகிபாபு.
அதோடு படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் பங்கை மிக சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.
இயக்குனர் அருள் எழிலன் முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார்.ஒரு இயக்குருக்கு தேவையான எல்லா ரசனைகளையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.நிச்சயம் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் பட்டியலில் இடம் பிடிப்பார் அதோடு எதார்த்த இயக்குனர் என்ற பட்டமும் கொடுக்கலாம்.