full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எல் ஜி எம் படத்தை பற்றி இப்போது பார்ப்போம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரரான டோனி தோனிக்கு எப்போதும் தமிழ்நாட்டு மீது பாசம் காரணம் தமிழ் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தமிழ் சினிமாவில் தோனி என்டர்டைன்மெண்ட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் படைப்பானது லெட்ஸ் கெட் மேரி அதாவது எல் ஜி எம் படத்தை தயாரித்திருக்கிறார்.

முதல் படைப்பான இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் இவானா நதியா மிர்ச்சி விஜய் யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் விசு அஜித் ஒளிப்பதிவுவில் தமிழ்மணி ரமேஷ் தமிழ்மணி இசையமைத்து இயக்கியிருக்கும் படம் எல் ஜி எம் சரி இந்த படத்தை பற்றி இப்போது பார்ப்போம்

ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரீஷ் கல்யாண் மற்றும் இவானா இருவரும் காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்பா இல்லாமல் அம்மா நதியாவின் அரவணைப்பில் வாழ்ந்த ஹரீஷ் கல்யாணின் முடிவுக்கு ஓகே சொல்கிறார் நதியா.,

இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தாலும், நதியாவுன் ஒரே வீட்டில் இருக்க இவானாவிற்கு விருப்பம் இல்லை. அதனால், நதியாவை பற்றி நன்கு தெரிந்து கொள்ள குடும்பமாக ட்ரீப் செல்ல முடிவெடுக்கிறார் இவானா

அதற்காக, இவர்கள் கூர்க் செல்கின்றனர். அங்கு நதியா மற்றும் இவானா இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டனாரா.?? ஹரீஷ் கல்யாண் – இவானா ஜோடி சேர்ந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஹரீஷ் கல்யாணுக்கும் இவானாவிற்கும் இடையேயான காதல் காட்சி ரசிக்க வைத்தது. படம் ஆரம்பித்ததும் வந்த பீச் பாடல், ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. லவ் டுடே படத்தில் கொடுத்த ஒரு க்யூட்னஸ் பெர்பார்மன்ஸை இந்த படத்திலும் கொடுத்து நமக்குள் எளிதாக ஒட்டிக் கொண்டார் இவானா..,

எனக்கு ஒரு ஐடியா என்று சொல்லும் இடத்தில், பக்கத்துவீட்டுப் பெண்ணாக ஜொலித்திருக்கிறார் இவானா. பல படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும், இன்னும் சற்று மெனக்கெடல் போட்டிருக்கலாம் ஹரீஷ் கல்யாண்.

நதியாவின் க்யூட்னஸ் இரண்டாம் பாதிக்கு மேல் தான் எடுபட்டிருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிவரை நதியாவை கஷ்டபடுத்திவிட்டு, இறுதியில் நதியாவை பிடித்திருக்கிறது என்று இவானா சொல்லும் காட்சி ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை..

விஸ்வஜித் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல், ரமேஷ் தமிழ்மணி இசையில் பாடல்கள் ஓகே என்றாலும், பின்னணி இசை கதையோடு பயணித்தது..

முதல் பாதியில் நம்மை கதையோடு பயணிக்க வைத்து கவர்ந்திழுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. ஒரு எளிமையான கதையாக இருந்தாலும், குடும்பத்தோடு பார்க்கும்படியான எந்த வித முகசுழிவும் இல்லாத ஒரு படமாக கொடுத்திருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி.

அதே போல இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், முழுப் படமாக பார்க்கும்போது பெரிதான ஒரு ஏமாற்றம் இல்லை என்றே கூறலாம்.

யோகிபாபு தனது கெளண்டர் காமெடிகளை சிதறவிட்டு, பலமாகவே படத்திற்கு கைகொடுத்திருக்கிறார். ஆர் ஜே விஜய், ஆங்காங்கே ரசிக்க வைத்திருக்கிறார்.

குடும்பமாக ரசிக்கும்படியான ஒரு காவியத்தை கொடுத்ததற்காக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணிக்கு வாழ்த்துகள் கூறிக்கொள்ளலாம்.. படம் முழுதும் நகைச்சுவையில் நம்மை சிரிக்க மற்றும் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர்.vitthiy

எல் ஜி எம் – குடும்பமாய் பார்க்கக் கூடிய ஃபீல் குட் படம்…