தனி மதமானது லிங்காயத்

General News

கர்நாடக மாநிலத்தில் பரவலாக வசிக்கும் லிங்காயத் சமூகத்தினர், தங்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக நாகமோகன் தாஸ் தலைமையில் அம்மாநில அரசு தனி கமிட்டி அமைத்திருந்தது.

நாகமோகன் தாஸ் கமிட்டி பரிந்துரையின் பெயரில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அம்மாநில அமைச்சரவை இன்று அங்கீகரித்து முடிவு செய்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கு மாநில அரசு இதே கோரிக்கையை பரிந்துரை செய்துள்ளது