full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது இரட்டா ட்ரைலர்!

இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது இரட்டா ட்ரைலர்!

 

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள “இரட்டா” படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல சஸ்பென்ஸ்களை கொண்டு இந்த த்ரில்லர் உள்ளது. இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஜோஜு இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தமிழ் – மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜோஜு ஜார்ஜுக்கு சொந்தமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Official trailer of "Iratta" has been released leaving the audience in suspense.....

ஏற்கனவே மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜ் தனது கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது. பல படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இருக்கும் என்பதை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.

‘இரட்டா’ படத்தில் ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி தவிர, ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோருடன் ஒளிப்பதிவு செய்ய. அன்வர் அலியின் மற்றும் முஹாசின் பராரி பாடல் வரிகள் எழுத மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜேக்ஸ் பிஜோவின் இசை அமைக்கிறார். மனு ஆண்டனி படத்தின் எடிட்டர் ஆக உள்ளார். ஆர்ட் ஒர்க் திலீப் நாத், ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒப்பனை ரோனெக்ஸ், சண்டை காட்சிகளை கே.ராஜசேகரின் இயக்கி உள்ளார்.