full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

லவ்வர் திரைவிமர்சனம்

லவ்வர் திரைவிமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான காதல் திரைப்படம் என்று சொன்னால் அது லவ்வர் என்று நிச்சயமாக சொல்லலாம். எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கலாம் அந்த படங்கள் எல்லாமே வித்தியாசமான திரைக்கதையின் மூலம் தான் நம் மனதை வருடி உள்ளது அதுபோலத்தான் இந்த லவ்வரும் திரைக்கதையின் மூலம் நம்மை வருட செய்கிறது. அதோடு படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும் நம்மை ஈர்க்கின்றனர் திறமையான நடிகர் பட்டாளம் இயக்குனர் பின்னணி இசை பாடல்கள் ஒளிப்பதிவு இப்படி எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு வெளியாகி இருக்கும் படம் லவ்வர்.

லவ்வர் மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் மணிகண்டன், கௌரிப்ரியா ,மதன் ராஜா, கலா, சுகன், சுகில்,ரம்யா, ஐஷு விஷ்வா மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல் டா இசையில் பிரபு ராம் வயாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் லவ்வர்.

சரி படத்தின் கதையைப் பார்ப்போம்.

கல்லூரியில் மணிகண்டனின் தனித்திறமையை பார்த்து காதல் வயப்படும் கௌரி பிரியா இவர்களின் காதல் கல்லூரிக்குப் பிறகும் தொடர்கிறது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இவர்கள் காதல் மிகவும் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றது. இதற்கிடையில் கௌரி பிரியா அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஆண் நண்பருக்கும் கௌரி பிரியாவுக்கும் காதல் என்று மணிகண்டனுக்கு கோபம் ஏற்படுகிறது. இதற்குக் காரணமும் உண்டு மணிகண்டன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு மது அருந்திக்கொண்டும் இருக்கிறார்.அதோடு இந்த காதல் ஜோடிக்கு அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மணிகண்டனின் கோவம் மற்றும் கௌரி பிரியா மேல் இருக்கும் அதீத காதல் இதனால் அவர் யாரிடம் குறிப்பாக எந்த ஆணிடமும் பழகுவது இவருக்கு பிடிக்காது இதனால் பொது இடங்களிலும் இவரின் நடவடிக்கை மிகவும் மோசமாக இருக்கும் இதில் மனம் உடைந்த கௌரி பிரியா இனி என்னால் உன்னுடன் காதலை தொடர முடியாது என்று பிரிந்து விடுகிறார் இருந்தும் மணிகண்டன் தொடர்ந்து அவரை பின்தொடர்வதோடு தொந்தரவும் செய்கிறார். இதையும் மீறி இந்த காதல் வெற்றி அடைந்ததா இல்லை தோல்வியில் முடிந்ததா என்பதுதான் படத்தின் மீதி கதை

படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது திரைக்கதை அதோடு இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் யாரும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சி படத்தில் இயக்குனரின் டச் என்பது ஒவ்வொரு காட்சிகளிலும் வெளிப்படுகிறது இயக்குனர் பிரபு ராம் வாயஸ் இந்த கதையை மிகவும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் தமிழ் சினிமாவில் பிரபு ராம் ஒரு மிகப்பெரிய இடத்தை தக்க வைப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

படத்தின் நாயகன் மணிகண்டன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அதோடு மிகச்சிறந்த
தனக்கு ஏற்ப கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது அவரது வெற்றிக்கு வழிகாட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும் கதையின் ஓட்டத்தை புரிந்து அதை மிக அழகாக உள்வாங்கி ஒரு நிஜ காதலன் போலவே அற்புதமாக தன் நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனரின் என்னத்துக்கு மிக அற்புதமாக உயிர் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மணிகண்டன் தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் அதோடு மிகச்சிறந்த ஒரு நடிகர் என்றும் நிச்சயமாக சொல்லலாம்.

படத்தின் நாயகி கௌரி பிரியா ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்த கௌரி பிரியா இந்த படத்தில் நாயகியாக வளம் வருகிறார். அபார நடிப்பில் ரசிகர்களை நேகிழவைக்கிரார். என்று தான் சொல்ல வேண்டும். கதையின் சாராம்சத்தை புரிந்து அதற்கேற்ப ஒரு மெல்லிய அழகிய ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். காதல் காட்சிகளிலும் சரி காதலினிடம் போடும் சண்டை காட்சிகளிலும் சரி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் நம்மை ரசிக்க வைக்கிறது. இவரின் நடிப்பு மட்டுமல்ல அழகும் நம்மை ரசிக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தில் நடித்த மற்றவர்களும் அவர் அவர்களின் பங்குக்கு அற்புதமான ஒரு நடிப்பை கொடுத்து இயக்குனருக்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ஒவ்வொருவரும் தன் கதாபாத்திரம் அறிந்து புரிந்து நடித்திருக்கிறார்கள்.

மில்லியன் டாலர்ஸ் யுவராஜுக்கு இந்த படமும் மில்லியன் டாலர்ஷில் கண்டிப்பாக குவிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை

படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் இசையமைப்பாளர் ஷான் ரோல்டான் கதை கேட்ப பின்னணி இசை பாடல்கள் மூலம் நாம் மனதை வருடி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இந்த கதைக்கு பின்னணி இசையின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொன்னாலும் மிகை ஆகாது.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒரு காதல் படத்திற்கு எப்படிப்பட்ட காட்சிகள் அமைக்க வேண்டுமோ அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இயக்குனர் என்ன மருந்து ஒளி ஓவியம் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லலாம் மொத்தத்தில் லவ்வர் பட கூட்டணி காதல் என்கின்ற ஒரு கவிதையை லவ்வர் படம் மூலம் கொடுத்து இருக்கிறது