தமிழ் சினிமாவில் மீண்டும் கதை நாயகனாக யோகிபாபு ஹலோ எப்.எம். ஆர் ஜே பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் லக்கி மேன்
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, வீரா, ரேச்சல் ரபேகா, அப்தூல், ஆர் எஸ் சிவாஜி, ஜெயக்குமார், உள்ளிட்ட நட்சத்திரங்களின் இயக்கத்தில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் லக்கி மேன்.
படத்தின் கரு அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டு அதே இடத்தில் இருப்பவர்களுக்கும், தன் உழைப்பை நம்பாமல், அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி தப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சிறுவயதில் இருந்தே தான் தொட்ட இடமெல்லாம் கெட்டதாக நடக்கிறது எனக் கூறி, தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று எண்ணி வாழ்கிறார் யோகி பாபு. இவருக்கும் ரேச்சல் ரபேகா மனைவியாக வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனியில் இடைத் தரகராக பணியாற்றி வரும் யோகிபாபு ஒரு ஏழ்மையான வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். நாம் இப்படி இருப்பதற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் யோகிபாபு.
அச்சமயத்தில், சிட் பண்ட் நிறுவனத்தில் யோகிபாபு மாத மாதம் பணம் செலுத்தி வருகிறார். அந்த சிட் பண்ட் நிறுவனத்தில் யோகிபாபுவிற்கு குலுக்கல் முறையில் கார் ஒன்று பரிசாக விழுகிறது.,
தனது வாழ்வில் கிடைத்த முதல் அதிர்ஷ்டம் அந்த கார் தான் என்று அதை கொண்டாடுகிறார். கார் வந்த அதிர்ஷ்டம் யோகிபாபுவின் வேலையிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. பணம் கொழிக்கிறது. வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் நேரத்தில் காரை யோரோ திருடிச் சென்று விடுகிறார்கள்.
யார் அந்த காரை திருடியது..?? கார் இழந்த பின் யோகிபாபுவின் வாழ்க்கை என்னவானது..?? மீண்டும் யோகிபாபுவின் கைக்கு அந்த கார் சிக்கியதா.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக யோகி பாபு ஜொலித்து இருக்கிறார்.யோகி பாபு சிறந்த காமெடியன் மட்டும் இல்லை சிறந்த நடிகர் என்று பல முறை நிரூபித்து இருந்தாலும். மீண்டும் இந்த படம் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் யோகி பாபு ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று காட்சி படுத்தி இருக்கிறார்.காமெடி எமோஷன் நக்கல் காதல் என அனைத்துள்ளும் நான் சிறந்த நடிகர் என்று அசால்ட் ஆகா நடித்து இருக்கிறார்.
வீரா, ரேச்சல் ரபேகா, அப்தூல், ஆர் எஸ் சிவாஜி, ஜெயக்குமார் அனைவரும் தனக்கு கொடுத்த பங்கை மிக சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக ரேச்சல் இந்த படத்திலும் ஜொலித்து இருக்கிறார். படத்தில் நடித்த அனைவரையும் நிச்சயம் பாராட்டவேண்டும் இயக்குனர் எண்ணம் புரிந்து அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து இருக்கிறார்கள்.
படத்தின் வசனங்கள் படைத்தல் பல இடங்களில் நம்மை சபாஷ் போடா வைக்கிறது.குறிப்பாக நல்லவனா இருந்தா நல்லவனாகத்தான் இருக்க முடியும், நல்லா இருக்க முடியாது” என்ற வாழ்க்கையின் நடைமுறை தத்துவத்தை விளக்கிச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
இயக்குனர் பாலாஜி வேணு கோபால் எடுத்து கொண்ட கதைக்கு அவரை நாம் மிகவும் பாராட்ட வேண்டும் அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டு அதே இடத்தில் இருப்பவர்களுக்கும், தன் உழைப்பை நம்பாமல், அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி தப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
முதல் பாதி காமெடியாக கலகலப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி ன்மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது.க்ளைமாக்ஸ் காட்சியை தரமாக முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுகிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.இயக்குனர் பாலாஜி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடிக்கிறார்.
சந்தீப் கே விஜயின் ஒளிப்பதிவு பாராட்டுக்குறியது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
பின்னணி இசை கதையோடு நாமும் நகர கைகொடுத்திருக்கிறது. மதனின் எடிட்டிங் படத்துக்கு மிக பெரிய பலமாக உள்ளது
மொத்தத்தில் லக்கி மேன் நம்மை கவருகிறான்.
லக்கி மேன் – திரைவிமர்சனம் Rank 3.5/5