தயாரிக்க முன்வந்த லைக்கா, தள்ளிப்போடும் கமல்!

News

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

இந்த திரைப்பட விழாவில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போது, இந்த திரைப்பட விழாவில் கமலின் ‘மருதநாயகம்‘ படத்தின் போஸ்டர்களையும் திரையிட்டுள்ளனர். ‘மருதநாயகம்’ படத்தின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு புத்தகமும் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘மருதநாயகம்’ படம் ஆரம்பிக்கப்பட்டு ஒருசில காரணங்களால் நின்று போயுள்ளது.

தற்போது, இப்படத்தை மீண்டும் தூசிதட்ட ஆரம்பித்துள்ளார் கமல். இப்படத்தை தயாரிப்பதற்கு லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. ஆனால், கமல்தான் ஒருசில காரணங்களால் படத்தை தொடங்குவதை தள்ளிப்போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.