வசனகர்த்தாவாக மாறிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்!

News
0
(0)

50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம் நடிப்பில், முன்னாள் கப்பல்படை வீரர் ப்ராஷ் இயக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் வசன கர்த்தாவாகி இருக்கிறார்.

வசனம் எழுதுவது குறித்து முருகன் மந்திரம் கூறும்போது, “பாடல் எழுதுவதை விட, வசனம் எழுதுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு பாடல் எழுதும்போது அதன் சூழலை, இயக்குநரின் எதிர்பார்ப்பை, கதாபாத்திரங்களின் உணர்வை, நமது வார்த்தைகளின் மூலம் மெட்டுகளுக்கு பொருத்தினால் போதும்.

ஆனால், வசனம் எழுதும்போது, கதை, கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்விட பின்னணி, பேச்சு மொழி பின்னணி, கதாபாத்திரத்தின் அப்போதைய மனநிலை, இயக்குநர் பேச விரும்பும் கருத்து, இப்படி நிறைய விசயங்களை தெரிந்து வசனம் எழுதினால் தான், படம் பார்க்கிறவர்கள் அந்த படத்தோடு, கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும்.

ஆபரேஷன் அரபைமா, ஒங்கள போடணும் சார் என இரண்டு படங்களுக்கு வசனம் எழுதியது வேறு வேறு மாதிரியான அனுபவம். கதையின் தன்மை இரண்டு படங்களுக்கும் மொத்தமாக வேறுபட்டது. அந்தந்த படத்திற்கான தேவையைப் பொருத்து வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து டைம் அண்ட் டைட் ஃப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “பிரளயம்”, “மிலிடெரி” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுகிறேன், என கூறுகிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.