full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பேராசிரியர் மா நன்னன் மறைவுக்கு அஞ்சலி

கடலூர் மாவட்டத்தில் பிறந்த பேராசிரியரும், தமிழறிஞருமான மா நன்னன் இன்று சென்னையில் காலமானார்.

94 வயதான இவர் தமிழில் கட்டுரை, பாடநூல்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அரசு தொலைக்காட்சியில் இவர் நடத்திய தமிழ்ப் பாடங்கள் வரவேற்பைப் பெற்றன. எழுத்தறிவித்தலில் நன்னன் முறை என்ற முறையை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர்.

மறைந்த இவரின் உடலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

“சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான மா.நன்னன் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். தமிழ் மொழி மீது நீங்கா பற்று கொண்டவர், அன்பாக பழகக்கூடியவர், பண்பாளர், பேராசிரியர்” என நன்னன் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.