மாநாடு-movie review

movie review Movies

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் படம் மாநாடு இப்படம் டைம் லூப் எனும் கருவை மையப்படுத்தி எடுக்க பட்டுள்ள படம். துபாயில் பணியாற்றும் சிம்பு, தன் நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணை கடத்தி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது.இந்த விபத்து மூலம் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவிடம் சிம்பு மற்றும் நண்பர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். நண்பர்களை பணைய கைதியாக வைத்து முதலமைச்சரை கொலை செய்ய சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நண்பர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் முதலமைச்சரை சுட்டு கொல்கிறார் சிம்பு. அதன்பின், போலீஸ் சிம்புவை கொன்று விடுகிறது.விழித்து பார்த்தால் சிம்பு மீண்டும் விமானத்தில் பயணிக்கிறார். இந்த நிகழ்வு மீண்டும் நடக்கிறது. அப்போது, டைம் லூப்பில் தான் சிக்கி இருப்பதை சிம்பு உணர்கிறார். இதையடுத்து இதிலிருந்து விடுபட சிம்பு முயற்சி செய்கிறார்.

விமர்சனம்

இறுதியில் டைம் லூப்பில் இருந்து சிம்பு விடுபட்டாரா? தானும் தப்பித்து முதலமைச்சரையும் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிம்பு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அவருக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காட்சிகள் தான் அதிகம். இருவருக்கும் மாநாடு பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது. இவர்கள் தவிர ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், உதயா, வாகை சந்திரசேகர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பெரிய வேலையில்லை.

ரொம்பவும் சிக்கலான, ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு இயக்குனர் வெங்கட் பிரபு, அதை புரியும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரே சீரான வேகத்தில் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, குழப்பம் இல்லாத திரைக்கதை என கைத்தட்டல் பெற்றிருக்கிறார் வெங்கட் பிரபு. படத்திற்கு பெரிய பலம் கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு. தெளிவான திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.யுவனின் இசையில் பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையை விட்டு நம்மால் பிரியமுடியவில்லை. அந்த அளவிற்கு அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார் யுவன். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.