full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :

மாவீரன் திரைவிமர்சனம்

மாவீரன் திரைவிமர்சனம்

இந்த படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நாயகியாக அதிதி படத்தில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நீண்ட இடைவெளிக்கு பிறகு சரிதா இந்த படத்தில் நடித்திருக்கிறார் குக் வித் கோமாளி புகழ் மோனிஷா யோகி பாபு அருவி மதன் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர் இவர்களுடன் விஜய் சேதுபதியின் குரலும் இந்த படத்தில் நடித்துள்ளது. பரத் சங்கர் இசையில் அஸ்வின் மடோன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாவீரன்

சரி இப்போ சிவகார்த்திகேயன் மாவீரன் மாவீரனா இல்லை மடிந்து விடுகிறானா என்று பார்ப்போம்

 

 

சேரியில் வசிக்கும் சிவகார்த்திகேயன் அம்மா சரிதா தங்கை குக் வித் கோமாளி புகழ் மோனிஷா எல்லாத்துக்கும் பயப்படும் சிவகார்த்திகேயன் தைரியமான தாய் அம்மா எந்த விஷயத்திற்கு சண்டை போட்டாலும் அதை தடுக்கும் சிவ கார்த்திகேயன் அம்மா எதா இருந்தாலும் பொறுத்துக் கொண்டு போகும் எதற்கு வீண் சண்டை என்று வாழும் ஒரு கதாபாத்திரமாக தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வாழ்ந்துள்ளார். அரசியல்வாதிகளால் இவர்களுடைய சேரியை காலி செய்து அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் பெயர்கிறார்கள் அந்த அடுக்கு மாடியில் பலவித சோதனைகள் மிகவும் மோசமான கட்டிடம் எதைத் தொட்டாலும் உடைந்து விடும் அளவுக்கு மிகவும் மோசமான சேதமடைந்த ஒரு கட்டிடத்தில் குடியிருக்க அரசாங்கம் அவர்களுக்கு இடம் கொடுக்கிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. வீட்டு வசதி வாரிய மந்திரியாக மிஸ்கின் அவரின் ஊழலை நேரடியாக தட்டிக் கேட்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன். அடுக்குமாடி கட்டிடத்தின் மேனேஜர் தன் தங்கை குடியிருக்கும் பாத்ரூம் நுழைகிறார் அதைக்கூட தட்டிக் கேட்காமல் பொருத்துப் போவோம் என்று சொல்லும் சிவகார்த்திகேயன் இதனால் வேதனையுடன் பேசும் சரிதான் இவன் எதற்குமே லாயிலாதவன் இவன் எதற்கு இவன் ஏன் வாழ வேண்டும் என்று சொல்கிறார் இதனால் தற்கொலை செய்ய முயற்சிக்கும் சிவகார்த்திகேயன் இங்கிருந்து தான் கதைக்களம் படு வேகமாக ஆரம்பிக்கிறது. இந்த அனுதியை தட்டு கேட்டாரா எப்படி கேட்கிறார் எப்படி சமாளிக்கிறார் தங்கையை பலாத்காரம் செய்ய வந்தவனிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லை இந்த கட்டிடத்தில் உள்ள மக்களை காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் மீதி கதை.

சிவகார்த்திகேயன் நிச்சயமாக பாராட்டக் கூடிய ஒரு நடிகர் இந்த கதாபாத்திரத்தில் ஒரு மாஸ் ஹீரோ நடிப்பதற்கு நிச்சயமாக யோசிப்பார்கள் ஆனால் கதைக்களம் மிக அற்புதமான கதை களம் என்று தன்னை மாற்றி நடித்ததற்கு நிச்சயமாக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம். சிவகார்த்திகேயன் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது அதேபோல ரொம்ப சீரியசான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரமாகவும் நடித்திருக்கிறார் காமெடியை விட கதைக்கும் கதை கலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார் மாஸ் ஹீரோ என்ற பட்டத்தை திறந்து வைத்துவிட்டு கதையின் நாயகனாக நடித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். சிவகார்த்திகேயன் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்த சரிதா சிவகார்த்திகேயனின் தாயாராக வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் நிறைவான நடிப்பு கதையின் பாத்திரத்திற்கு பக்கபலமாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

குக் வித் கோமாளிப்புகள் மோனிஷா இவர் திறமையை நாம் ஏற்கனவே சின்னத்திரையில் பார்த்து வெயிட் பண்ணுங்கள் அதையும் மீறி இதில் புறா அற்புதமான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

நாயகி அதிதி பத்திரிக்கையில் சப்வே எடிட்டராக வேலை செய்யும் அதிதி சிவகார்த்திகேயனுடன் காதல் காட்சிகள் இல்லை கண்களால் சில இடங்களில் பேசிக் கொள்கிறார். நாய்க்கு அணை வலுவான பாத்திரம் என்று சொல்ல முடியாது கதை கேட்பான பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

மிஷ்கின் கதையின் ஆணிவேர் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை காத்திருக்கிறார் ஒரு மிக அரசியல்வாதியை நம் கண் முன்னே நிறுத்துகிறார் என்று சொன்னால் மிகை ஆகாது.

அருவி மகன் அடுக்குமாடி குடியிருப்பில் மேனேஜராக வரும் இவர் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை காணுகிறார் தமிழ் சினிமாக்கு வரும் மிகச் சிறந்த வில்லன் கிடைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இயக்குனர் அஸ்வின் மடோன் மொத்த படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மண்டூலா படத்தில் இப்படி ஒரு வித்தியாசமான திரைக்கதையின் மூலம் நம்மை கவர்ந்தாரோ அதேபோல இந்த படத்திலும் அற்புதமான ஒரு கதை திரைக்கதை மூலம் நம்மை கவர்ந்திருக்கிறார் பல இடங்களில் நம்ம சிந்திக்க வைக்கிறார் கைதட்ட வைக்கிறார் இயக்குனர் அஸ்வின் இவரின் கதைக்களம் கட்சி அமைப்பை பற்றி சொல்லிவிட்டால் படம் பார்க்கும்போது படத்தின் சுவாரசியம் குறைந்துவிடும் அதற்காக நாம் இதை குறிப்பிடவில்லை. மிகச் சிறப்பான திரைக்கதை மூலம் சிவகார்த்திகேயனை எப்படி கையாள வேண்டும் என்று அறிந்து அற்புதமான ஒரு நடிப்பை சிவகார்த்திகேயனிடம் பெற்றிருக்கிறார் அவரிடம் மட்டுமல்ல மிஷ்கின் அறிவியல் மதன் சரிதா மோனிஷா அனைவரிடமிருந்தும் அற்புதமான ஒரு நடிப்பை வெளிவாங்கியுள்ளார். இயக்குனர் அஸ்வின் மடோன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை

மொத்தத்தில் மாவீரன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார்.