மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்

cinema news
0
(0)

*மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்*

உணவுத்துறையில் சாதனை படைத்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு ‘மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023’ விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நடிகரும், உணவுத்துறையில் சாதனை படைத்து வருபவருமான மாதம்பட்டி ரங்கராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்துறையில் உணவு துறையும் ஒன்று. சுவையான உணவு தயாரித்தல்… சுடச்சுட பரிமாறுதல்… குறைவான நேரத்தில் அதிகமான நபர்களுக்கு தரமான உணவை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக தயாரித்து வழங்குதல்.. என உணவுத்துறை தனித்தனி பிரிவாக பிரிந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. மெத்த படித்த தனவந்தர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரையில் பசி என்பது இயல்பான ஒன்று. மக்களின் பசியை போக்குவதற்காக செயல்படும் இந்த உணவுத் துறையில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களில் பிரதி பலன் பாராது தங்களது சேவையை கடமையாக கருதி உழைத்து வரும் சாதனையாளர்கள்… மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் சாதனையாளர்கள்… பசியை களைவதற்காக புதிய கோணத்தில் சிந்தித்து, அதனை நடைமுறையில் செயல்படுத்தி வரும் சாதனையாளர்கள்.. என பல சாதனையாளர்களை கண்டறிந்து, அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த மாதம்பட்டி கோல்டன் லீப் 2023 விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.

கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா ஹாலில் ஜூலை 22 ஆம் தேதி அன்று கோலாகலமாக நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விருந்தோம்பல் துறையில் புதிய அடையாளத்தை பதிவு செய்து தமிழக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், இந்த விருது வழங்கும் நிகழ்வினை ஒருங்கிணைப்பதால் இத்துறையில் பணியாற்றி வரும் அனைவரும் இந்த விருதினை பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.