full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாடலாசிரியரின் பாராட்டைப் பெற்ற இயக்குநர்

அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் “நிபுணன்”. இதில் இவருடன் பிரசன்னா, வரலட்சுமி உட்பட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. “இதுவும் கடந்து போகும்” என்கிற வரிகளுடன் துவங்கும் இந்தப் பாடல் மிகக் குறுகிய காலக் கட்டத்தில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் நவீனின் இசையில், பிரதீப் பாடி உள்ள இந்தப் பாடலை தனது ட்விட்டர் மூலம் மிகவும் பாராட்டி உள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. அந்த பாடலை தான் இயற்றவில்லை என்றாலும், அந்த பாடலை இயற்றிய மற்றொரு கவிஞரை மனதாரப் பாராட்டி உள்ளதை திரை உலகம் மனதார வரவேற்றுள்ளது. இந்தப் பாடலை எழுதியுள்ளவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

“மதன் கார்க்கியின் இந்த நல்ல குணமே அவரை இந்த இளம் வயதில் உச்சத்தில் உட்கார வைத்துள்ளது. அறிமுகம் இல்லாத இன்னொருவர் இயற்றிய பாடலை ஒரு பாடல் ஆசிரியர் பாராட்டுவது, நமது கலாச்சாரத்தை ஒட்டி உள்ள நம் நல்குண நலனைப் பிரதிபலிக்கிறது. போட்டிகள் நிறைந்த இந்த படவுலகில் இவரைப் போன்ற இளைஞர்கள் இத்தகைய நட்பு மனப்பான்மை போற்றுவது எதிர்கால சினிமாவுக்கு நல்லது.” என மகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குனரும், பாடலாசிரியருமான அருண் வைத்தியநாதன்.