மதராஸ்காரன்’- திரைவிமர்சனம் 3/5
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இதற்கு முன் ரங்கோலி என்ற படத்தை இயக்கியானுபட்டதோடு இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.இதுவரை நிறைய படங்கள் சென்னையை மையமாக வைத்துவந்து இருக்கு அனால் இந்த படத்தின் டைட்டிலே மெட்ராஸ்காரன். இயக்குனர் வாலி மோகன் தாஸ் ரங்கோலி போல கலர்புல்லாக கொடுத்து இருக்காரா இல்லை எப்படி என்று பார்ப்போம்.
இந்த படத்தில் மலையாள புகழ் நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், லல்லு மற்றும் பலர் நடிப்பில் சாம் சிஎஸ் இசையில் பி. ஜெகதீஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சரி கதைக்குள்ளே போகலாம்:
சென்னையைச் சேர்ந்த ஹீரோ ஷேன் நிகாம் தனது திருமணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த விரும்புகிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத ஒரு சிறு விபத்து ஷேன் நிகாமின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அது எப்படி நடந்தது? அவர் எப்படி பாதிக்கப்படுகிறார்? இறுதியில் அதிலிருந்து மீள்வாரா? அல்லது இல்லையா? ‘மட்ராஸ்காரன்’ ஒரு ஆக்ஷன் த்ரில்லர்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான மலையாள நடிகர் ஷேன் நிகம், தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தை கையாண்டுள்ளார். அத்தைகளிடம் ஐஸ் வைத்து பேசுவது, அம்மாவிடம் பாசமாக பேசுவது, காதலியிடம் கெஞ்சுவது என வயதுக்கு ஏற்றவாறு நடித்து ஆக்ஷன் காட்சிகளையும் ஹிட் ஆக்கியிருக்கிறார். ஆனால், அக்மார்க் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது அவரது டயலாக் டெலிவரியில் இருந்து தெரிகிறது.
கதாநாயகியாக நடிக்கும் நிஹாரிகாவின் ஒரு வார்த்தைதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்றாலும், படத்தில் அவரது திரை பிரசன்ஸ் மிக மிக குறைவு. அதை முறியடிக்கும் வகையில் ‘அலைபாயுதே’ படத்தின் ஒரு பாடலில் அவளை சில நிமிடங்கள் ஆட வைத்து ஆறுதல்படுத்தியிருக்கிறார்கள்.
ஆண்டி நல்லவனா கெட்டவனா என்ற கேள்வியை எழுப்பும் கேரக்டரில் நடித்திருக்கும் கலையரசன் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.
படத்தில் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ், அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மாவாக கீதா கைலாசம், அத்தையாக வரும் தீபா, தோழியாக வரும் லல்லு உட்பட அனைத்து நடிகர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். திரைக்கதைக்கு வலு சேர்க்கும் பகுதி.
சாம்.சி.எஸ் இசையில் கல்யாணப் பாடல் திரும்பத் திரும்ப வருவதோடு மட்டுமில்லாமல் கொண்டாட்ட மனநிலைக்கும் பொருந்துகிறது. பின்னணி இசை, சற்று சத்தமாக இருந்தாலும், வேகமான கதைக்களம் மற்றும் அதிரடி காட்சிகளுக்கு வீரியம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்துடன் ஒத்திசைந்து நகர்கிறது மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சித்தரிக்கிறது.
வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கிய, த்ரில்லர் ஆக்ஷன் ஜானரை மிரட்டும் திரைக்கதை மூலம் நம்மை இழுக்கிறார்.
படத்தின் மிக முக்கியமான பகுதி ஆக்ஷன் மற்றும் எமோஷன் என்றாலும், எமோஷனல் காட்சிகள் போல் ஈர்க்காததால், திரைக்கதை சற்று பலவீனமாக உள்ளது. ஆனால், நடந்த தவறுக்கு தான் காரணம் அல்ல என்பதை ஹீரோ உணர்ந்து, அதற்கான காரணத்தை அறிய முற்படும்போது, படம் வேகம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு த்ரில்லான த்ரில்லர் அனுபவத்தையும் தருகிறது.
மொத்தத்தில் ‘மதராஸ்காரன்’ விறுவிறுப்பானவன்