மதுரைப் பெண் நடிப்பில் உருவாகும் ஆக்சன் படம்

News
0
(0)

“வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்ற பொன்மொழியை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தான் “வீரத்தேவன்”.

இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது.

நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம். அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப்படுத்தினோம் என்கிறார் இயக்குனர். மற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – மகேஷ், K.தேவ், இசை – S.தர்மபிரகாஷ், பாடல்கள் – யுகபாரதி, சினேகன், வீரன்செல்வராசு, எடிட்டிங் – A.K.நாகராஜ், கலை – சுப்பு அழகப்பன், நடனம் – அசோக் ராஜா, பாரதி அகர்வால், ஸ்டன்ட் – ஆக்சன் பிரகாஷ், நிர்வாக தயாரிப்பு – M.G.சிவகுமார்

G.S.மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கராத்தே கோபாலன் மிக பிரமாண்டமாய் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – வீரன்செல்வராசு
படத்தை பற்றி பேசிய இயக்குநர், “நாகரிகம் என்ற நச்சு இன்று நகரத்திலிருந்து நகர்ந்து கிராமப்புறங்களையும் தாக்கி கொண்டிருக்கிறது. இந்த கால கட்டத்திலும் உயிர்ப்புடன் இருப்பது குடும்ப உறவுகளை தாங்கி நிற்கிற கிராமப்புறங்கள் தான். கிராமப்புற மக்களின் உறவுகள், அதில் உள்ள சிக்கல்கள், ஆசை, அன்பு, கோபம் போன்றவையை காதல், சென்டிமென்ட், ஆக்சன் கலந்து உருவாக்கி உள்ளோம். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை படத்தின் தலைப்புக்கேற்ப ஆக்சன் படமாக உருவாக்கி உள்ளோம்.”

படத்தின் படப்பிடிப்பு மதுரை, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.