full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவே அவருக்கு குழந்தையாக பிறந்திருப்பதாக கூறி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் தம்பதியின் குழந்தைக்காக, சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியும், நடிகருமான துருவ் சர்ஜா ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு வெள்ளி தொட்டிலை வாங்கியுள்ளார். வெள்ளி தொட்டில் அருகே நின்று துருவ் சர்ஜா எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.