full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆந்திர முதல்வராக மகேஷ் பாபு வசூல் சாதனை

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் மகேஷ்பாபு. அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளியாகிய படம் ‘பரத் அனே நேனு’. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படத்தை கொரதலா சிவா இயக்கியிருக்கிறார்.

மகேஷ் பாபு ஆந்திராவின் முதல்வராக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ், சரத்குமார், தேவராஜ், ஆமானி, சித்தாரா, பூசானி கிருஷ்ணமுரளி, அனிஷ் குருவில்லா, ராவ் ரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்த 2 நாட்களில் படத்தின் வசூல் ரூ.125 கோடியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபிசில், வேகமாக ரூ.25 லட்சத்தை வசூல் செய்த `பாகுபலி’ அல்லாத படம் என்ற பெருமையை ‘பாரத் அனே நேனு’ பெற்றுள்ளது.

இதன்மூலம் மகேஷ் பாபு வரலாற்றில் ‘பரத் அனே நேனு’ முக்கிய இடம் பிடித்துள்ளது. உலகம் முழுக்க சுமார் 45 நாடுகளில் இந்த படம் ரிலீசாகி உள்ளது.