full screen background image
Search
Wednesday 18 December 2024
  • :
  • :
Latest Update

மக்கள் செல்வன் படத்தில் இயக்குநர் இமயம்!!

ஒரே ஒரு மேக்கிங் வீடியோ தான், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே விழிகள் விரிய காத்திருக்கிறது “மக்கள் செலவன்” விஜய் சேதுபதி நடிக்கும் “சீதக்காதி” திரைப்படத்திற்காக. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார்.

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகி இருந்த அவரது “அய்யா” தோற்றத்திற்கு பயங்கரமான வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், மூத்த இயக்குநர் மகேந்திரனும் நடிக்கிறார் என்கிற தகவல் முன்னமே வெளியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய ஆளுமை இப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி, மகேந்திரன் இவர்களுடன் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், இப்படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.