full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பெண் கல்விக்கான உலகளாவிய போராட்டம் தொடரும் என டுவிட்டரில் மலாலா பதிவு

பாகிஸ்தானில் குழந்தைகள் கல்விக்குக் குரல் கொடுத்த மலாலா தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்திற்குப்பின் உயிர் பிழைத்தார். இதனையடுத்து லண்டனில் தங்கி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வந்தார். அவ்வப்போது குழந்தைகள் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் குறித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில் பள்ளிப் படிப்பை முடித்துள்ள மலாலா சொந்தமாக டுவிட்டர் கணக்கைத் துவங்கி உள்ளார். இவரது டுவிட்டர் கணக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உள்பட உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோவர்களாக உள்ளனர்.

டுவிட்டரில் மலாலா இட்டுள்ள பதிவில், “பள்ளிப் படிப்பை நான் முடித்திருப்பது கசப்பு கலந்த இனிப்பு சம்பவமாக கருதுகிறேன். என்னுடைய எதிர்காலத்தில் ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் பெண்கள் கல்வியை உணர்த்தி உலக அளவில் பயணம் மேற்கொள்ள உள்ளேன். பெண் கல்விக்கான எனது உலகளாவிய போராட்டம் தொடரும் என பதிவிட்டுள்ளார்.

மலாலா 1997-ஆம் ஆண்டு பிறந்தார். 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். மிகவும் சிறு வயதில் இந்த பரிசினைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.