full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இரட்டிப்பு மகிழ்ச்சியில் மாளவிகா

தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி” படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றதன் மூலம் டிஜிட்டல் சினிமா மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியவர் இயக்குனர் ஆதிராஜன்.

தற்போது இவர், ஒரு கபடி வீரனின் காதல் கதையை, கௌரவக் கொலை சம்பவங்களின் பின்னணியில் எழுதி இயக்கி வருகிறார். இதில் கபடி வீரர் ராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார்.

இவர் பிரம்மா படத்தில் சசிகுமார் தங்கையாகவும், இவன் வேற மாதிரி படத்தில் நாயகி சுரபியின் தங்கையாகவும், விழா படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஐந்து படங்களின் நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மேனன் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

அருவாசண்டை படத்தின் கதையை கேட்டதும் அசந்துவிட்டேன். குறிப்பாக இயக்குனர் ஆதி கிளைமாக்ஸ் காட்சியை விவரித்த போது என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன். இந்த படம் தமிழ்த் திரையுலகில் எனக்கு ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து தரும். பெரிய ஹீரோயின்களுக்கு அமைவது போல எனக்கான அறிமுக பாடல் காட்சியும் இருப்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் நான் பிஸியான நாயகியாக ஆகிவிடுவேன்.” என்று உற்சாகம் பொங்க சொன்னார் மாளவிகா மேனன்.

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரிக்கும் இந்த படத்திற்கு தரண் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். கலை – ஏ.டி.ஜெ, ஸ்டன்ட் – மிரட்டல் செல்வம், நடனம் – சிவசங்கர், தீனா, தயாரிப்பு மேற்பார்வை – சங்கர், டிசைன்ஸ் – சபீர்.