full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கொரோனாவால் மீன் வியாபாரியாக மாறிய மலையாள நடிகர்

கொரோனாவால் மீன் வியாபாரியாக மாறிய மலையாள நடிகர்

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் 5 மாதங்களுக்கு மேலாக முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் நடிகர்கள் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்.

இந்தி நடிகர் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுனமழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ள டைரக்டர் ஆனந்த் முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். பிரபல மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர் கருவாடு வியாபாரம் செய்கிறார்.

இந்த நிலையில் மலையாள நடிகரான வினோத் கோவுர் மீன் வியாபாரியாக மாறி இருக்கிறார். இவர் கழநோல் கனவு, ஆதாமின்டே மகன், புதிய தீரங்கள், உஷ்தக் ஓட்டல், வர்ஷம், படடம்போல், பிரேமம் உள்பட பல மலையாள படங்களில் நடித்துள்ளார். வினோத் கூறும்போது, கொரோனாவால் திரையுலகம் முடங்கி வேலை இல்லாமல் இருக்கிறேன். இதனால் நண்பர்கள் ஆலோசனையின் பேரில் மீன் கடை திறந்து இருக்கிறேன்” என்றார்.