full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

மன்னிப்பு கேட்ட மஞ்சிமா!

தூங்கா நகரம் இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ராதிகா சரத்குமார் மற்றும் சூரி ஆகியோர் நடித்திருக்கும் படம் “இப்படை வெல்லும்”. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் நாளை(09.11.2017) உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன்.

ட்விட்டரில் மஞ்சிமா மோகன் குறியிருப்பதாவது,

“முதலில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஃப்ரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் “குயின்” ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருப்பதால் என்னால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

அடுத்ததாக, லைகா நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லையேல் இந்த படம் நினைத்ததை விட இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது. அதேபோல் இயக்குநர் கௌரவ் சாருக்கும், உதய் மற்றும் சூரி அண்ணா ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கும், எங்களோடு நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. தொடர்ந்து நல்ல படங்களுக்கு தங்களது ஆதரவை அளித்து வரும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் எனது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் சென்று படம் பார்க்கவும், இணையத்தில் படங்கள் திருடப்படுவதை ஊக்குவிக்கக் கூடாது என்றும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறாக அந்த பதிவில் மஞ்சிமா மோகன் குறிப்பிட்டிருக்கிறார்.