தேவராட்டத்தில் மஞ்சிமா மோகன்

News

‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் `தேவராட்டம்’. கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். `முத்துராமலிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கெளதம் கார்த்திக்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது