“கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க”.. வெட்கப்பட்ட துருவா..!

News
0
(0)

“எக்சட்ரா எண்டெர்டெயின்மென்ட்” சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் “திலகர்” துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக “பிக் பாஸ்” புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

இந்தப்படம் வரும் ஜூலை-27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தப்படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். கதாநாயகிகளில் ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டிலும், அஞ்சனா ஜப்பானிலும் இருப்பதால் அவர்களால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை.பெரும்பாலும் எந்த விழாக்களிலும் அவ்வளவாக தலைகாட்டாத நகை​ச்​சுவை நடிகர் மனோபாலா மழையையும் பொருட்படுத்தாது இந்த விழாவில் கலந்துகொண்டார்.

இயக்கு​நர் ராகேஷ். வெள்ளைக்காரன் காலத்துல நாம சினிமா மூலமா புரட்சி காரணமான கருத்துக்களை மக்கள்கிட்ட கொண்டுபோயிட​க்​
கூடாதுன்னு சென்சார் கொண்டுவந்தாங்க.. இன்னைக்கு சென்சார்ல இருக்கிறவங்க பாலுமகேந்திராவோ, பாலசந்தரோ அல்ல.. சினிமா சூட்சுமம் தெரிந்த ஆட்கள் சென்சாரில் இருந்தால் தான், தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் விளையாடாமல் இருப்பார்கள். இந்தப்படத்தின் நாயகன் துருவாவுக்கு என்ன குறைச்சல்.? ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகனாக இருக்கிறார் துருவா. படத்தின் இசையமைப்பாளர் அச்சு, சுமா நச்சென இசையமைத்துள்ளார்” என
த​ன் பங்கிற்கு சென்சாரின் தவறான அணுகுமுறையை ஒரு காட்டு காட்டினார்.

இந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மாஸ் ரவி பேசும்போது, “டைரக்டர் ராகேஷ் என்னை​க்​
கூப்பிட்டு இந்தப்படத்துல ஒரு நல்ல கேரக்டர் இருக்குன்னு சொல்லி சப்பை’ங்கிற கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்கார். செயின் அறுக்கிற ஆளா தான் நடிச்சிருக்கேன்.. இதுக்காக ட்ரெய்னிங் கூட கொடுத்தாங்க” என்றார்.

நடிகர் மனோபாலா பேசும்போது, “ராகேஷோட இந்த இரண்டாவது படத்துலயும் நான் நடிச்சிருக்கேன்.. பொதுவா நான் எந்தப்படத்தோட விழாக்களிலேயும் அவ்வளவா கலந்து​க்​கிறது இல்ல. ஆனால் இந்தப்படம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதான் வந்துட்டேன்” என்றார்.

படத்தின் நாயகன் துருவா பேசும்போது,

“சென்சாரில் சான்றிதழ் கொடுக்க மறுத்து, அது பத்திரிகை மூலமா செய்தியா வெளியானப்ப தான் இப்படி ஒரு படம் இருக்குன்னே வெளியே தெரிஞ்சது. டைரக்டர் ராகேஷ் மத்த எல்லா யூனியன்லேயும் கார்டு வாங்குற அளவுக்கு எல்லா வேலையையும் இறங்கி செஞ்சாரு. ஹீரோயின் இல்லாம நடக்குற சினிமா பங்ஷன் இதுவா தான் இருக்கும். என்ன பண்றது..? ஒரு கதாநாயகி அஞ்சனா பிரேம் ஜப்பான்ல இருக்காங்க.. அவங்க கூட, கூப்பிட்டிருந்தா வந்திருப்பாங்களோ என்னவோ? உங்களுக்கே தெரியும். இ​ன்​னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா இப்ப பிக் பாஸ் வீட்டுல இருக்காங்க.. எப்ப வருவாங்களோ யாருக்கு தெரியும். இந்தப்படத்துல என்னோட அம்மாவா சரண்யா மேடம் வாழ்ந்திருக்காங்க.. நானும் வாழ்ந்திருக்கேனான்னு படம் பார்த்துட்டு சொல்லுங்க” என்றார்.

முத்தாய்ப்பாக பேசவந்த ​இயக்கு​நர் ராகேஷ்,

“எத்தனையோ போராட்ட செய்திகள் புதுசு புதுசா தினசரி பேப்பர்ல வந்தாலும் நாள் தவறாம இடம் பிடிச்சுட்டு வர்றது செயின் பறிப்பு சம்பவங்கள் தான். அதுதான் இந்தப்படத்தை எடுக்க என்னை தூண்டுச்சு. நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் நகை அணிந்துகொண்டு தனியா நடந்துபோனா அதுதான் உண்மையான சுதந்திரம்னு மகாத்மா சொன்னார்.. ஆனா இன்னைக்கு பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே.. இதை சொல்லித்தான் படத்தையே ஆரம்பிக்கிறோம். என்னுடைய முதல் படம் வெளியாகி எட்டு வருடத்துக்குப்பின் இந்தப்படம் கிடைத்துள்ளது.(​மேடையிலேயே அழுதுவிட்டார்)​ பின் ​இயக்கு​நர் மனோபாலா வந்து தேற்ற தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,

அதற்காக தயாரிப்பாளர் மதியழகனுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது. இந்தப்படத்தின் கதாநாயகனாக துருவா அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். குன்றத்தூர் அருகே படப்பிடிப்பு நடைபெற்றபோது ஓடிவந்த வேகத்தில் தடுக்கி விழுந்து, பின்னர் மீண்டும் எழுந்து ஓடிப்போய் கொஞ்சம் தள்ளி கீழே விழுந்து கிடக்கும் சரண்யா மேடத்தை தூக்க வேண்டிய காட்சியில் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார்.

“சென்சாரில் நாம் எதற்காக ஒரு காட்சியை எடுக்கிறோம் என​ப்​ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மொபைலில் பேசிக்கொண்டே பைக் ஓட்டுனா விபத்துல சிக்குவீங்கன்னு என ஒரு செய்தியை சொல்ல வந்தா, அவர்களோ ரத்தம் சிவப்பாக இருக்கிறது, பச்சை கலருக்கு மாற்றுங்கள் என்கிறார்கள். பெண்கள் எந்தவிதமாகவெல்லாம் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்களது நகைகள் பறிக்கப்படுகிறது என அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக காட்சிகளை அமைத்தால், அந்த காட்சிகளை பார்த்துவிட்டு, நீங்களே செயின் அறுக்கும் வழிகளை சொல்லிக்கொடுக்கிறீர்களா? என கேட்கிறார்கள்” என்றார்.

விழாவில் ​ எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் விவேக், பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், நடிகர்கள் மகா, சிவ குரு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். விழாவினை பி ஆர் ஓ ஜான் தொகுத்து வழங்கினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.