மேக்ஸ் – திரைவிமர்சனம் – 4/5

மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுடன் கைகோர்த்து இணைந்து உள்ள படம் தான் மேக்ஸ் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம் ஒரே இரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ளனர்.
இந்த படத்தின் நாயகனாக கிச்சா சுதீப்இளவரசு,சுனில்,வரலக்ஷ்மி, சரத் லோகிதாஸ், ஆடுகளம் நரேன், வம்சி கிரிஷ்ணா ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் பி. அஜனீஷ் லோக்நாத் இசையில் சேகர் சந்திரா ஒளிப்பதிவில் விஜய் கார்த்திகேயா இயக்கதில் கலைபுலி எஸ். தாணு மற்றும் கிச்சா சுதீப் தயாரித்து இருக்கும் படம் மேக்ஸ்
மேக்ஸ் என்று அழைக்கப்படும் அர்ஜுன் மஹாக்ஷய் (சுதீப்) ஒரு தைரியமான நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர். தனது அதிரடி நடவடிக்கையால் பல முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தற்போது இடைநீக்கத்திற்கு பிறகு அவர் புதிய காவல் நிலையத்தில் அடுத்த நாள் பணிக்கு சேர இருக்கும் நிலையில் ஊருக்கு வந்த அன்று இரவு, போதையில் இரண்டு இளைஞர்கள் பணியில் இருக்கும் சில போலீஸ் அதிகாரிகள் மீது மோதி காயப்படுத்துவதில் இருந்து படம் தொடங்குகிறது. இவர்கள் இருவரும் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் இடம் தவறாக நடந்து கொள்வதைக் மேக்ஸ் காண்கிறார். இரண்டு இளைஞர்களையும் கைது செய்கிறார். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மோசமான அமைச்சர்களின் மகன்கள் என்பதைக் காவல் நிலையத்தில் உள்ள மற்ற போலீஸ்காரர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் என்ன விளைவுகள் ஏற்பட போகிறது என்ற பயத்தில் இருக்கும் காவலர்களிடம் எப்ஐஆர் போடும் படி மேக்ஸ் எச்சரித்து அவர்களை லாக்கப்பில் தள்ளுகிறார். ஒரு வலுவான தொடர்ச்சியான காட்சிக்கு பிறகு, ஆயுத அறையில் இருவரும் இறந்து கிடக்கும் போது கதை அதிர்ச்சி தரும் திருப்பத்தை எடுக்கிறது. முதலில் அவர்கள் ஒருவரையொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு தாக்கி இறந்து விட்டதாக தோன்றினாலும், அன்று இரவு நேரம் செல்ல செல்ல ஆழமான ரகசியங்கள் வெளிப்படுகின்றன. இருவரையும் விடுவிக்க அரசியல் அழுத்தம் அதிகரித்து வருவது மற்றும் ஸ்டேஷனில் உள்ள காவலர்கள் கவலைப்படுவதால், போலீஸ்காரர்களை காப்பாற்ற மாக்ஸ் இளைஞர்களின் சடலத்தை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார்.இதற்கிடையில், அமைச்சர் தனக்கு நம்பிக்கைக்குரிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாவை (வரலட்சுமி சரத்குமார்) போலீஸ் நிலையத்திற்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்த்து தனது மகன்களை போலீஸ் நிலையத்திலிருந்து மீட்கும்படி அனுப்புகிறார். அர்ஜுன் தனது
குழுவையும் காவல் நிலையத்தையும் பாதுகாக்க விரைந்து செயல்பட சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இறந்த இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையத்திலிருந்து எப்படி வெளியே எடுக்கிறார். போலீஸ் கமிஷனர் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாவுக்கும் மேக்ஸ் எப்படி பாடம் புகட்டுகிறார், ஒரே இரவில் என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.
சுதீப் தொடக்கக் காட்சியில் இருந்தே அதிரடி வலுவான கதையில் முழுமையாக கவனம் செலுத்தி முழு திரைப்படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். காவல் ஆய்வாளர் அர்ஜுன் மஹாக்ஷய்ஃ – மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சுதீப்பின் வசீகரமான நடையும், உடல் மொழியும் காட்சியமைப்பிற்கு துணை நிற்கிறது. அதே நேரத்தில் பிற நடிகர்கள் திரையைப் பகிரும்போது அவர்களின் திரை இருப்பை சிறப்பாக பெறுவதையும் உறுதி செய்கிறார்.
ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரி ரூபாவாக வரலக்ஷ்மி சரத்குமார், காவலர் ஆரத்தியாக சம்யுக்தா ஹொர்னாட், காவலர் மீனாவாக சுக்ருதா வாக்லே, வில்லன் கானியாக சுனில், அமைச்சர் பரசுராமாக சரத் லோகிதாஸ்வா, கேங்ஸ்டர் நரசிம்மனாக வம்சி கிருஷ்ணா, அமைச்சர் டேனியலாக ஆடுகளம் நரேன், தேவராஜாக பிரமோத் ஷெட்டி, கேங்ஸ்டர் செபாஸ்டியனாக ரெடின் கிங்ஸ்லி, ஒரு நேர்மையான தலைமைக் காவலர் ராவணனாக இளவரசு, அம்மாவாக சுதா பெலவாடி, காவலர் ஜகதீஷாக அனிருத் பட், உதவி காவல் ஆய்வாளர் தாஸாக உக்ரம் மஞ்சு, காமராஜு, கரண் ஆர்யா உட்பட அனைத்து துணை நடிகர்கள் தங்கள் அழுத்தமான நடிப்பு கதைக்கு ஆழம் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்களத்திற்கு ஒரு தனித்துவமான இயக்கவியல் சேர்க்கிறது, படம் ஈர்க்க கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது.
மேக்ஸ் போன்ற வேகமான த்ரில்லருக்கு இசையமைப்பாளர் அஜனீஷ் லோகநாத் சிறப்பாக செய்திருக்கிறார். பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா காட்சி கோணங்கள் குறிப்பாக அதன் உச்சக்கட்ட தருணங்களில், படத்தின் பிரம்மாண்டத்தை உயர்த்துகிறது.
படத்தின் பலம் சண்டை காட்சிகள் அதிரடி இயக்குனர் சேத்தன் டிசோசா இயக்கிய சண்டை காட்சிகள் விருந்தாக உள்ளன. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை இரண்டு மணி நேரம் முழுவதும் விறுவிறுப்பாக நகரும் வகையில் படத்தொகுப்பாளர் எஸ்.ஆர்.கணேஷ் பாபு எடிட் செய்துள்ளார்.
மேக்ஸின் கதை ஒரு இரவில் நடைபெறுகிறது ஏற்கனவே வெற்றி பெற்ற கைதி திரைப்படத்தை நினைவூட்டுகிறது. ஆரம்பம் முதலே பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் சுவாரஸ்யமான ஜெட்-வேக திரைக்கதையில் வில்லன் கதாபாத்திரத்தை கொஞ்சம் வலுவாக வடிவமைத்து இருக்கலாம் இயக்குனர் விஜய் கார்த்திகேயா.
மொத்தத்தில் பிரம்மாண்டத்திற்கு உரியவரான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள மேக்ஸ் தனது சகாக்களை பாதுகாத்து காப்பாற்ற தந்திரமாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்பட்டு அதிரடி வேட்டையாடும் கம்பீரமான சிங்கம்.