full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கட்சி ஆரம்பிக்கிறாரா மயில்சாமி?

 

ஒரு வருடமாக தமிழகம் சந்திக்காத பிரச்சினைகளும் இல்லை, சந்திக்காத அரசியல் குழறுபடிகளும் இல்லை. சர்ச்சை இல்லாமல் பொழுதுகள் விடியாது, என்று கூறுமளவிற்கு தினந்தினம் ஏதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதுவும் சமீபத்தில் வரிசையாக ரஜினி, கமல் மற்றும் விஷால் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த “பிரேக்கிங் நியூஸ்”களால் தமிழகம் திக்குமுக்காடி கிடக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவர்களது அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்களே இங்கு நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் நடிகரும், முன்னாள் அதிமுக ஆதரவாளருமான மயில்சாமியும் இணைந்து விடுவார் போல. சமீபமாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார் மயில்சாமி. இப்போது திடீரென்று அவர் குறித்த ஒரு அறிவிப்பொன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதில், மயில்சாமி புது கட்சி தொடங்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு, “தேசிய பணக்காரர்கள் பாதுகாப்பு சங்கம்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப் பூர்வமான தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.