full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மருத்துவ பரிசோதனை: சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற முயன்ற ராகினி திவேதி

போதைப்பொருள் மருத்துவ பரிசோதனையின் போது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை ராகினி திவேதி

போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் தனது வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்காமல் சோதனை செய்ய மறுத்துவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை காட்டிய பிறகு அமைதியாக பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை முடிவுகள் வர ஏழு நாட்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கின் முக்கிய நடிகை ராகினி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து மருந்து பரிசோதனைக்கு கொடுத்து உள்ளார்.

நடிகை ராகினி, சிறுநீரில் தண்ணீர் கலந்ததாகக் கூறி மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி பொது மருத்துவமனையின் மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
யாராவது போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை சிறுநீர் மருந்து பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். சிறுநீரில் தண்ணீரைச் சேர்ப்பது சிறுநீரின் வெப்பநிலையைக் குறைக்கும், இது உடல் வெப்பநிலைக்கு சமமாக இருக்கும். ராகினி பின்னர் இன்னும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவும், மற்றொரு சிறுநீர் மாதிரியைக் கொடுக்கவும் கேட்டு கொள்ளப்பட்டார். ராகினியின் நடத்தை “வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது” என்று விசாரணை அதிகாரி விவரித்தார், போலீஸ் காவலில் நீட்டிப்பு கோரும் போது இந்த சம்பவம் மாஜிஸ்திரேட்டுக்கு குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது என்று கூறினார். போலீசார் விசாரணைக்கு மேலும் மூன்று நாட்கள் அனுமதி வழங்கபட்டு உள்ளது.