மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 #Mega156 “விஸ்வம்பரா” என தலைப்பிடப்பட்டுள்ளது

cinema news News
0
(0)

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 #Mega156 “விஸ்வம்பரா” என தலைப்பிடப்பட்டுள்ளது

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156 விஸ்வம்பரா என தலைப்பிடப்பட்டுள்ளது!! அதிர வைக்கும் டைட்டில் க்ளிம்ப்ஸேவுடன் , 2025 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி கடந்த சங்கராந்திக்கு ‘வால்டர் வீரய்யா’ படம் மூலம் தனது ரசிகர்களுக்கும், திரையுலக பிரியர்களுக்கும் அறுசுவை விருந்தளித்தார். இந்த ஆண்டு மெகாஸ்டாருக்கு எந்த திரையரங்கு வெளியீடும் இல்லை என்றாலும், அவரது பிரம்மாண்டமான திரைப்படமான #Mega156 இன் தயாரிப்பாளர்கள், படத்தின் தலைப்பை அற்புதமான க்ளிம்ப்ஸேவுடன் வெளியிட்டதன் மூலம், ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தியை கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.

தற்செயலாக விழும் மாயாஜாலப் பெட்டியை யாரோ ஒருவர் பூட்டி வைக்க, ஒரு பரலோக உலகத்திற்கு நம்மைக் கொண்டு செல்வதில் இருந்து இந்த கிளிம்ப்ஸே வீடியோ தொடங்குகிறது. அப்பெட்டி கருந்துளை வழியாகச் சென்று சிறுகோள் மீது மோதி, பல இடையூறுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, இறுதியாக பூமியை அடைகிறது, இது ஒரு பெரிய அனுமன் சிலையுடன் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. பூமியில் மோதும்போது ஒரு பள்ளம் தோன்றுகிறது, ஆனால் மாயப் பெட்டிக்கு எதுவும் நடக்கவில்லை. இறுதியாக, படத்தின் தலைப்பு “விஸ்வம்பரா” என கண்களுக்கு விருந்தாக விரிகிறது.

பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்லும் வகையிலான இந்த வீடியோவில் காட்டப்படும், மாயாஜால பெட்டியின் பயணம், நாம் காணப்போகும் சினிமா அனுபவத்தைப் பற்றிய சிறு தெளிவைத் தருகிறது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலகத்தரத்தில் அமைந்துள்ளது மிக முக்கியமாக, விஸ்வம்பரா எனும் தலைப்பு வெகு கவர்ச்சிகரமாக உள்ளது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. இப்படம் 2025 சங்கராந்தி விருந்தாக திரைக்கு வருமென, தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.