full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மெய்யழகன் திரை விமர்சனம்

மெய்யழகன் திரை விமர்சனம்  4.5/5

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான உணர்வுபூர்வமான படம் தான் மெய்யழகன்.

மெய்யழகன் என்ற என்ற டைட்டில் படத்தின் கிட்டதட்ட இறுதி பகுதியில் தான் வருகிறது அந்த டைட்டில் வரும் நேரம் திரையரங்கமே அதிர்கிறது மக்களின் ஆரவாரம் அந்த அளவிற்கு இந்த கதைக்கும் இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் ரசிகர்கள் கொடுக்கிறார்கள்.

இயக்குனர் பிரேம்குமார் 96 படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இவர் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தபோது நான் ஒரு மிக சிறந்த இயக்குனர் என்று 96 படம் மூலம் நமக்கு நிரூபித்தார். ஆனால் தற்போது இந்திய சினிமாவில் நான் ஒரு முக்கியமான இடத்தை பிடிப்பேன் என்று மெய்யழகன் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சண்டைகள் கிடையாது காதல் காட்சிகள் கிடையாது டூயட் கிடையாது இது எதுவுமே இல்லாமல் ஒரு அருமையான ஒரு படத்தை குடும்பத்தோடு சிரித்து மகிழ்ந்து வெளி வரலாம் என்பதை இந்த படத்தின் மூலம் உணர்த்திருக்கிறார். மசாலா படங்களின் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு உணர்ச்சிபூர்வமான படம் தான் இந்த படம்.
மெய்யழகனாக கார்த்திக் அவரின் உறவினராக வரும் அரவிந்தசாமி அரவிந்த்சாமி மனைவியாக தேவதர்ஷினி கார்த்திக் மனைவியாக ஸ்ரீதிவ்யா இவர்களுடன் ராஜ்கிரன் ஜெயப்பிரகாஷ் இளவரசு மற்றும் பலர் நடிப்பில் கோவிந்தா வசந்த் இசையில் பிரேம்குமார் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் மெய்யழகன்.

கவர்கிறார். கார்த்திக் அறிமுகம் முதல் படத்தின் இறுதி காட்சி வரை பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் பேசும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ரசிக்க வைக்கிறார் நம்மை சிரிக்க வைக்கிறார் படத்தின் சுவாரசியத்தை மிக அற்புதமாக கூட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் மெய்யாகன் என்ற கதாபாத்திரத்திற்கு கார்த்திக் அற்புதமான நடித்த அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அரவிந்த்சாமி இவரை பல கோணங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் இதுவரை நாம் அவரைப் பார்த்தது இல்லை தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அற்புதமான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் மெய்யழகன் கார்த்திக் அன்பில் நனைந்து அவரிடம் பழகும் விதங்களும் சரி அவரை யார் என்று தெரியாமல் தவிர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு காட்சிகளிலும் சரி அரவிந்த்சாமி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் நடித்த மற்ற ராஜ்கிரன் தேவதர்ஷினி ஜெயப்பிரகாஷ் கருணாகரன் இவர்கள் அனைவரும் தனக்கு கொடுத்த பங்கை மிக அற்புதமாக மிக கனகச்சிதமாக நடித்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

கோவில் வசந்த் இசையில் பாடல்கள் குறிப்பாக பின்னர் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது அதேபோல ஒளிப்பதிவாளரும் இயக்குனரின் எண்ணம் புரிந்து மிகச் சிறந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

படத்தின் நாயகன் என்றால் அது இயக்குனர் பிரேம்குமார் நாயகிகள் இருக்கிறார்கள் ஆனால் காதல் காட்சிகள் கிடையாது டூயட் கிடையாது குறைந்த கதாபாத்திரங்கள் மசாலா காட்சிகள் இல்லாமல் இவ்வளவு அற்புதமான ஒரு திரைக்கதையை அமைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நெகிழ வைத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை கார்த்தியும் அரவிந்த்சாமி பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பேச்சுகளில் எந்தவித சலிப்புத் தன்மை ஏற்படுத்தாமல் நம்முடைய ரசிக்க வைத்திருப்பது தான் மிக அற்புதம் என்று சொல்ல வேண்டும் முதல் பாகம் படம் எப்போது ஆரம்பித்தது எப்போது இடைவெளி வந்தது என்று என்று தெரியவில்லை அவ்வளவு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார். அவரின் திரைக்கதைக்கு அற்புதமான நடிப்பை கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள் கார்த்திக்கும் அரவிந்த்சாமியும்.
படத்தின் இரண்டாம் பகுதியும் அப்படித்தான் அமைத்திருக்கிறார் இருவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் அதில் சில வரலாற்று கதைகளும் சொல்கிறார்கள் அதோடு ஜல்லிக்கட்டு பற்றியும் ஒரு அழகான ஒரு காட்சியை அமைத்திருக்கிறார். இயக்குனர் பிரேம்குமார் இரண்டாம் பாகம் கொஞ்சம் சுருக்கமாக சொல்லி இருந்தால் படம் இன்னும் வேகம் பிடித்து இருக்கும் என்று சொல்லலாம். இருந்தும் படத்தில் எந்த எந்த ஒரு இடத்திலும் நமக்கு சோர்வு தட்டவில்லை ஆரம்பம் முதல் இறுதி வரை அற்புதமான திரை கதையின் மூலம் அழகான வசனங்கள் மூலமும் நம்மளை சிறகடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் மெய்யழகன் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை ரசிகர்கள் துணிந்து இந்த திரைப்படத்திற்கு சென்று திரையரங்கில் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு தரமான படம் என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் மெய்யழகன் அழகன்