பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் “கருத்துக்களை பதிவு செய் ராகுல் இயக்குகிறார்

News
0
(0)

பிக்சர்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும்   “ கருத்துக்களை பதிவு செய் என்ற படத்தை தயாரிக்கிறது..

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான்.

ஒளிப்பதிவு        –        மனோகர்

இசை                    –        கணேஷ் ராகவேந்திரா

பாடல்கள்           –         சொற்கோ

கலை                   –         மனோ

 எடிட்டிங்       –     மாருதி

நடனம்                           –        எஸ்.எல்.பாலாஜி

தயாரிப்பு மேற்பார்வை  –        D.P.வெங்கடேசன்

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். 

இணை தயாரிப்பு –   JSK கோபி.,.. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் ராகுல். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 ,1 A.M  என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே ஹாரர் டைப் படங்கள்.

இப்போது இயக்கும் கருத்துக்களை பதிவு செய் படமும் ஹாரர் டைப் படமே.

ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான் என்கிறார் ராகுல்…

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது…சமூக வலை தல மான பேஸ்புக் பற்றியது தான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி ,காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள் என்பது தான் கதை.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை என் “கருத்துக்களை பதிவு செய்” படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும்  சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது…நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு தான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன். பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க…இல்லவே இல்லை

பிசாசத்தான் வாங்கி கொடுக்கிறாங்க” 

படம் விரைவில் வெளி வர உள்ளது என்றார் ராகுல் …

இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம் தான் இது. படம் விரைவில் வெளி வர உள்ளது என்றார் ராகுல்..

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.