இசைஞானி இளையராஜா இசையில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் லெனின்பாரதி இயக்கத்தில் உருவாகி பல்வேறு சர்வதேச திரைவிழாக்களில் விருதுகளையும் சர்வதேச திரை ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ திரைப்படம் ‘சினிமா சிட்டி’ நிறுவனம் மூலமாக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஆண்டனி நடிகை காயத்திரி கிருஷ்ணாவுடன் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் கதைக் களத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
