மேரிகிறிஸ்துமஸ் திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் இருந்து இனிதி சினிமாவில் தடம் பதித்து இன்று கமல்ஹாசன் ரஜினிகாந்த் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் விஜய் சேதுபதிக்கு முதலில் வாழ்த்துகளுடன் ஆரம்பிப்போம்
பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மெரி கிறிஸ்துமஸ்.
இப்படத்திற்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.
கதை மும்பையில் நடக்கிறது. கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறார் நாயகி கேத்ரீனா கைஃப். தனது காதலியை கொன்றதுக்காக சுமார் 7 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் இரவு அன்று எதேச்சையாக சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். கேத்ரினாவிற்கு 3 வயதில் ஒரு மகள். மகளை வீட்டில் உறங்க வைத்து விட்டு, வெளியே சுற்றுகின்றனர் கேத்ரினாவும் விஜய் சேதுபதியும்.
சிறிது நேரம் கழித்து கேத்ரினாவின் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது, அங்கு கேத்ரீனாவின் கணவர் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.
இதனால் இருவரும் அதிர்ச்சியாகின்றனர். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
இரெயில் எஞ்சின் போல ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் கதையானது, இடைவேளைக்குப் பின் வேகமெடுக்கிறது.
விஜய் சேதுபதியின் நடிப்பும் கேத்ரீனாவின் நடிப்பும் மைல் ஸ்டோன் தான். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர்.
தியாகராஜா குமாரராஜாவின் வசனங்கள் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஒரு இரவில் நடக்கும் கதை என்றாலும், அதில் எந்த அளவிற்கு சுவாரஸ்யத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்து நம்மை சீட்டின் நுனிக்கே அழைத்துச் சென்று விட்டார் இயக்குனர்.
விஜய் சேதுபதியை பாலிவுட் திரையுலகம் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மிகவும் கடினமான ஒரு கதாபாத்திரத்தை மிகவும் ஜாலியாக செய்து முடித்திருக்கிறார்.
இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகவும் பக்கபலமாக வந்து நிற்கிறது.
இரண்டாம் பாதியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான். திரைக்கதையின் வேகம், இரண்டாம் பாதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மெரி கிறிஸ்துமஸ் – பரபரப்பு….